»   »  திருநங்கையாக மாறும் விருதாலம்பட்டு நாயகன்!

திருநங்கையாக மாறும் விருதாலம்பட்டு நாயகன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

விருதாலம்பட்டு திரைப்படம் ஜனவரி 22ல் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் கதாநாயகன் திருநங்கையாக நடிக்கிறாராம்.

தமிழ் தாய் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாஜலபதி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘விருதாலம்பட்டு'.

இந்த படத்தின் இசை, முன்னோட்ட காட்சிகள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமையன்று சென்னையில் உள்ள எப்.எம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த படத்தில் கதாநாயகனாக ஹேமந்த்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக சான்யா ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். மற்றும் கராத்தே ராஜா, பசங்க சிவகுமார், நெல்லைசிவா, மணிமாறன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வெங்கட் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ராம்ஜி இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்ஆர்.ஜெயகாந்தன்.

மீனவர் குடும்பம்

மீனவர் குடும்பத்து நாயகனுக்கும், பண்ணையார் மகளுக்கும் ஏற்படும் காதல்தான் கதை என்கிறார் இயக்குநர்.

கார்த்தி - ரேவதி காதல்

மீன் பிடிக்கும் தொழில் செய்யும் நாயகன் கார்த்தி, பண்ணையார் மகள் ரேவதியை காதலிப்பதை சுவாரஸ்யமாக படம் பிடித்துள்ளார்களாம்.

காதல் ஜெயித்ததா?

இவர்களின் காதல், நாயகியின் தந்தையான பண்ணையாருக்கு தெரிய வருகிறது. முதலில் காதலை எதிர்கிறார். பின்னர் இரு வீட்டு சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது.

திருநங்கையாகும் நாயகன்

இது பிடிக்காத நாயகியின் தாய்மாமன் அவளது காதலனை அடித்து உதைத்து வீசுகிறான். உயிருக்கு போராடிய நிலையில் இருக்கும் நாயகன் திருநங்கையாக மாறுகிறான்.

காதல் ஜெயிக்குமா?

வில்லனை எதிர்க்கும் நாயகன் முடிவில் காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதையாம். இப்படம் ஜனவரி 22ல் திரைக்கு வர இருப்பதாகவும் இயக்குநர் கூறியுள்ளார்.

English summary
Virudalam pattu movie will release on 22nd of January.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos