twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    1 மணி நேரம் 46 நிமிடங்கள்.. "விசாரணை"க்கு... யூ/ஏ

    By Manjula
    |

    சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விசாரணை திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ/ஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.

    அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, முருகதாஸ், கிஷோர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விசாரணை. இந்தப் படத்தை தனுஷுடன் இணைந்து வெற்றிமாறன் தயாரித்து இருக்கிறார்.

    Visaranai Gets U/A Certificate

    இப்படத்தின் வெளியீடு தொடர்பான அனைத்து உரிமைகளையும் லைக்கா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. சுமார் 1 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை உலகத் திரைப்பட விழாக்களுக்கு படக்குழுவினர் அனுப்பி வைத்தனர்.

    வெனிஸ் திரைப்பட விழாவில் தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் பெருமையை விசாரணை கைப்பற்றியது. தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களிலும் விசாரணை திரையிடப்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடும் நோக்கத்துடன் அதற்கான எடிட்டிங் பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டனர். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யூ/ஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.

    வருகின்ற 2016ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் இப்படம் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனுஷ் தெரிவித்து இருக்கிறார்.

    காவல்நிலையத்தில் குற்றவாளிகளை நடத்தும் முறைகள் மற்றும் அங்கே நடக்கும் நிகழ்வுகளை எடுத்துக் காட்டும் படமாக விசாரணை உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vetri Maaran - Dhanush's Visaranai Movie Gets U/A Certificate.This Movie may be be Released on 2016 January or February
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X