» 

அர்ஜூன் மகள் அறிமுகமாகும் பட்டத்து யானை- ஒரு பார்வை

Posted by:

நடிகர் அர்ஜூன் மகள் அறிமுகமாகும் படம் பட்டத்து யானை. விஷால்தான் ஹீரோ. முதல் முதலில் தமிழில்தான் தன் மகளை அறிமுகப் படுத்துகிறார் அர்ஜூன்.

தெலுங்கில் நடிக்கக் கேட்டபோதும், இல்லை முதலில் தமிழில் நடிக்கட்டும். மற்ற மொழிகள் அப்புறம் என்று கூறிவிட்டாராம் அர்ஜூன்.

ஜி.பூபதி பாண்டியன் இயக்கும் இந்தப் படத்தை சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மைக்கேல் ராயப்பன் எம்எல்ஏ தயாரிக்கிறார்

பூபதி பாண்டியன்

'தேவதையை கண்டேன்', 'திருவிளையாடல் ஆரம்பம்', 'மலைக்கோட்டை' வெற்றிப் படங்களுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் பட்டத்து யானை. மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் (பி) லிட் நிறுவனம் தயாரிக்கிறது.

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க நாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார். படம் முழுக்க வந்து காமெடியில் வெளுத்து வாங்குகிறார் சந்தானம். இவர்கள் தவிர சீதா, ஜெகன், பட்டிமன்றம் ராஜா, மனோபாலா, சபேஷ் கார்த்திக், 'வட போச்சே' சரித்திரன், சித்ரா லெட்சுமணன், கிருஷ்ண மூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், மயில் சாமி, ஜான் விஜய், பெசன்ட் நகர் ரவி, மும்பை வில்லன் விஜய் சர்மா, அஜய் சேனா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

கதை என்ன?

பூங்காவனம் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார் சந்தானம். 'சீசனுக்கு சீசன் மட்டும் சமையலில் பரபரப்பாக இருந்து கொண்டு ஊர் ஊராகப் போவதற்கு ஒரே இடத்தில் ஓட்டல் வைத்து சமையல் திறனைக் காட்டி மக்களுக்குப் பசியாற்றி ஆண்டு முழுவதும் பிசியாக இருப்போம்' என்று யோசனை சொல்கிறார் உடன் இருக்கும் விஷால். நல்ல திட்டமா இருக்கே.. என்று ஓட்டல் வைக்க முடிவு எடுக்கிறார் சந்தானம். அப்படி அவர்கள் காரைக்குடியிலிருந்து திருச்சிக்கு புறப்படுகிறவர்கள் ஓட்டல் வைத்தார்களா? இடையில் என்னென்ன பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்பதையே முழு நீள நகைச்சுவை விருந்தாக பந்தி வைத்து பரிமாறுகிறார் பூபதி பாண்டியன். பந்தியிலையில் வைக்கும் போனஸ் இனிப்பாக விஷால்- ஐஸ்வர்யா அர்ஜுன் காதல் கதை அமைந்திருக்கும்.

அர்ஜூன் மகள் வந்த கதை

நாயகி தேடிய போது பிரபலமாகாத பள்ளி மாணவி வயதில் ஒருவர் தேடிய போது 'மத கஜ ராஜா' படப்பிடிப்பில் சுந்தர்.சி தான் அர்ஜுன் மகள் நடிக்க விருப்பமாக இருக்கும் தகவலை விஷாலிடம் கூறியுள்ளார். விஷால் பூபதி பாண்டியனிடம் கூற பேசி முடிவானது.

'நடிகர் மகளை அறிமுகமாக்குவதில் மகிழ்ச்சி, பெருமை'

அர்ஜுன் மகளை நடிக்க வைத்த அனுபவம் பற்றி பூபதி பாண்டியன் கூறுகையில், "ஒரு நடிகரின் மகளை நடிக்க வைப்பதில் மகிழ்ச்சி,பெருமை. சுந்தர்.சி.என்னைப் பற்றி நடிகர் அர்ஜுனிடம் கூறும் போது பூபதி பாண்டியன் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதை அமைப்பவர். எனவே அவர் படத்தில் அறிமுகம் செய்வது நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

தெளிவானவர் ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா அர்ஜுன் தெளிவாக இருக்கிறார். அப்பா, அம்மா, மட்டுமல்ல தத்தா கூட நடிகர்.இவர் மூன்றாவது தலை முறையாக நடிக்க வந்திருக்கிறார். எளிதில் புரிகிறது. புரியாத காட்சிகளை நடித்துக் காட்டச் சொல்வார். சினிமா குடும்பத்துப் பெண்ணை நடிக்க வைத்த போது ஒரே குடும்பம் போல உணர்ந்தோம். எல்லோருமே ஐஸ்வர்யா மீது தனி பாசம் காட்டினார்கள். நன்றாக கவனித்துக் கொண்டார்கள். அர்ஜுன் சார் நன்றியுடன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்" என்கிறார்.

அது என்ன பட்டத்து யானை?

பட்டத்து யானை தலைப்பு பற்றி கேட்டால் "இப்படம் பலருக்கும் உயரம் காட்டி பலபடிகள் மேலேற்றி வைக்கும்படி இருக்கும் படம் பார்த்தால் தலைப்பின் பொருள் விளங்கும்," என்கிறார் பூபதி பாண்டியன்.

விஷாலுக்கு அவரது திரை வாழ்வின் பரப்பை அதிகப்படுத்தும் வகையிலும் சந்தானத்துக்கு இன்னொரு பரிமாணம் காட்டும் வகையிலும் இப்படம் இருக்கும்.ஐஸ்வர்யாவுக்கு அழுத்தமான அறிமுகமாகவும் அமையும் என்கிறார் இயக்குநர்.

 

 

ஜாக்பாட் திருடன் மயில்சாமி

மயில்சாமி ஜாக்பாட் என்கிற திருடனாக வருகிறார்.கதை நகர சாவி கொடுப்பதே இந்தப் பாத்திரம் தான். ஒரு பெண் குழந்தை அசத்தலாக நடித்துள்ளது.

"இத்தனை நட்சத்திரங்கள் இடம் பெற்றாலும் படம் முழுக்க ஆக்கிரமித்து ஒரு பாத்திரம் போல பேசப்படும் வகையில் படத்தின் திரைக்கதை இருக்கும்"என்கிறார் இயக்குனர்.

 

See next photo feature article

கலைஞர்கள்

எஸ்எஸ் தமன் இசையமைக்கிறார். எஸ் வைத்தி ஒளிப்பதிவு செய்கிறார். நா முத்துக்குமாரும் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதியுள்ளனர். பிஆர்ஓ ஜான்சன், எடிட்டிங் ஏஎல் ரமேஷ்.

Read more about: vishal, aishwarya arjun, pattathu yaanai, பட்டத்து யானை, ஐஸ்வர்யா அர்ஜூன்
English summary
Here is the preview of Vishal - Aishwarya Arjun starrer Pattathu Yaanai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos