twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத்தை கார்ப்பொரேட்டாக மாற்றுவது எங்கள் லட்சியம்!!- விஷால்

    By Shankar
    |

    சென்னை: நடிகர் சங்கத்தை கார்ப்பொரேட் நிறுவனமாக மாற்றப் போகிறோம் என்று விஷால் தெரிவித்தார்.

    Vishal owes to change Nadigar Sangam as a corporate!

    நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், பொன்வண்ணன், கர்ணாஸ், வடிவேலு, கோவை சரளா ,குட்டி பத்மினி, ஸ்ரீமன் ,நந்தா, ரமணா, விக்ராந்த், சங்கீதா, எஸ்.வி.சேகர், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Vishal owes to change Nadigar Sangam as a corporate!

    நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசியது:

    என்னைப் பொறுத்த வரை அனைத்து நடிகர்களும் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அனைத்து ஊருக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. நாங்கள் அனைவரும் ஒரு நோக்கத்துக்காக போராடி வருகிறோம். எங்களுடைய நோக்கம் இப்போது கடைக்கோடி கன்னியாக்குமரி வரை போய் சேர்ந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

    Vishal owes to change Nadigar Sangam as a corporate!

    அவர்கள் கூறுவதை போல் நாங்கள் யாருக்கும் சரக்கோ கோழி பிரியாணியோ வாங்கி கொடுக்கவில்லை. நாங்கள் சங்கத்துக்காக செலவழிக்கும் பணம் அனைத்தும் எங்கள் சொந்தப் பணம். எங்கள் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி மிகவும் பொறுப்புள்ளவர். இப்போது கூட இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு நானும் கார்த்தியும் பொறுப்பாக கணக்கு பார்க்க வேண்டும். கார்த்திதான் எங்கள் சங்கத்தின் கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார். மற்றவற்றை எங்கள் சங்கத்தினர் பார்த்துகொள்வார்கள். வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து வாக்களிக்க விரும்புபவர்கள் நீதிபதியை அணுகி அவர்களிடம் அனுமதி பெற்று நேரில் வந்து வாக்களிக்கலாம்.

    Vishal owes to change Nadigar Sangam as a corporate!

    நாங்கள் தற்போது ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உறுப்பினரை பொறுப்பாளராக அறிவிக்க உள்ளோம். நாங்கள் யாரோ பைனான்சியரிடம் இருந்து பணம் பெற்று சங்க வேலைகளை செய்கிறோம் என்று ராதா ரவி குற்றம் சாட்டியுள்ளார். அது தவறான தகவல். அந்த பைனான்சியரின் முகவரியை அவர்கள் கொடுத்தால் நாங்கள் அவரைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். நான் இதுவரை என்னுடைய படத்தை தயாரிக்க தான் பைனான்சியாரை நாடியுள்ளேன். இன்று சங்க கூட்டத்தில் ஆயிரக் கணக்கில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

    எஸ்.பி.ஐ. சினிமாஸ்க்கு நாங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க தயாராக உள்ளோம். பணத்தை திருப்பி கொடுத்து நாங்கள் உறுதியாக நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டுவிடுவோம்.

    நாங்கள் நடிகர் சங்கத்தில் படித்த நடிகர்களை வேலைக்கு அமர்த்த உள்ளோம். நாங்கள் நடிக்கும் படத்தை நாங்களே மிக பெரிய அளவில் தயாரிக்கும் முடிவில் உள்ளோம்," என்றார்.

    Vishal owes to change Nadigar Sangam as a corporate!

    நாசர்

    இதற்கிடையே மேடையேறிய நாசர், "நடிகர் சரத் குமார் நாங்கள் கமல் ஹாசன் பேச்சை கேட்டு இதை செய்கிறோம் என்று ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு அறிவில் குறைந்தவர்கள் அல்ல. எங்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியும். எனக்கே இப்போதுதான் புரிகிறது, ஏன் அனைத்து நடிகர்களும் எங்கள் எதிர் அணியினரை எதிர்க்கிறார்கள்," என்றார்.

    மீண்டும் மைக் பிடித்த நடிகர் விஷால், "நடிகர் சங்கத்தை கார்பொரேட்டாக மாற்ற வேண்டும் என்பது எங்கள் ஆசை. இந்த ஜனநாயக நாட்டில் கமல் ஹாசன் போன்ற நடிகர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து எங்களுடன் புகைப்படம் எடுத்துகொள்வது ஆரோக்கியமான விஷயம்," என்றார்.

    English summary
    Actor Vishal owed to change Nadigar Sangam as a corporate company if his team was came to power.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X