»   »  சிம்பு திட்டியதற்கு பதில் சொல்ல விரும்பாத விஷால்!

சிம்பு திட்டியதற்கு பதில் சொல்ல விரும்பாத விஷால்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சிம்பு ஒருமையில் திட்டியது குறித்து விஷாலிடம் கேட்டபோது, அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்ய

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி நாடக நடிகர்களை சந்திக்க நடிகர் விஷால் அணியினர் சேலம் சென்றனர். வியாழக்கிழமை காலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

Vishal's reply for Simbu's harsh comments

அப்போது விஷால் கூறுகையில், "எந்த சமரசமும் செய்ய தயாராக இல்லை. தேர்தலை சந்திக்க இருக்கிறோம். நீதிமன்றத்திற்கு சென்று அக்டோபர் 15ஆம் தேதி நடக்க வேண்டிய தேர்தல் 18ஆம் தேதிக்கு நடக்க இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கத்தினர், இயக்குநர்கள் சங்கத்தினர் சமரசம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதனை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை," என்றார்.

தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு விஷாலும் அவரது அணியினரும் அளித்த பதில்களும்...

கேள்வி: பாண்டவர் அணிதான் நடிகர் சங்கத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

விஷால்: தயாரிப்பாளர் சங்கம் உள்பட அனைத்து சங்கத்திலும் தேர்தல் நடக்கிறது. நடிகர் சங்கத்தில் மட்டும் ஏன் இந்த கேள்வி வருகிறது. தேர்தலில் நிற்பது திரையுலக நலனுக்காக மட்டுமே. மேலும் சங்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சி. நடிகர் சங்க நிலத்தில் கட்டிடம் வேண்டும். நான் கேட்கவில்லை. அந்த இடத்தில் கட்டிடம் வரவேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள்.

கேள்வி: 11ஆம் தேதிக்கு மேல் அனைவரும் ஓரணியில் இருப்பார்கள் என்று சரத்குமார் அணியினர் சொல்லியிருக்கிறார்கள். இது சாத்தியமா?

விஷால்: இல்லை.

ரோகினி: அவர்கள் வந்து சேர்ந்துகொண்டால் ஓரணிதான்.

கேள்வி: விஷால் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம் என்று கூறுகிறார்களே.

ரோகினி: ஜனநாயக முறைப்படி தேர்தல் என்று வந்துவிட்டது. எனவே தேர்தல் நடக்கப் போகிறது. விஷால் அணி வெற்றி பெறப்போகிறது என்ற எண்ணம் அனைவரிடமும் வந்துள்ளது.

கேள்வி: விஷாலின் தனிப்பட்ட பிரச்சனையால்தான் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார்களே.

விஷால்: நான் ஏன் சரத்குமார் - ராதிகா குடும்பத்தைப் பிரிக்கப் போகிறேன்...

கேள்வி: சிம்பு உங்களை ஒருமையில் பேசியுள்ளார். சங்கத்தைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?

விஷால்: நான் நடிகன். உறுப்பினர் கார்டு இருக்கு. அதனால் முறையாக நான் தேர்தலில் நிற்கிறேன்.. வேறு எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை.

கேள்வி: பாக்யராஜ் இரு அணிகளின் கூட்டங்களிலுமே கலந்து கொண்டாரே..

விஷால்: அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு நமது சீனியர். அவர் உணர்வை மதிக்கிறோம்.

English summary
Actor Vishal says that he wouldn't like to reply for Simbu's harsh comments against him in Nadigar Sangam issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos