twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்க தேர்தல்: விஷால் அணிக்கு 64% சரத் அணிக்கு 36%: திரைப்படக் கல்லூரி கருத்துக்கணிப்பு

    By Mayura Akilan
    |

    சென்னை: நடிகர் விஷால்,நாசர் உள்ளிட்ட பாண்டவர் அணியினருக்கு 64 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாக தனியார் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் சரத்குமார் அணிக்கு 36 சதவிதம் மட்டுமே வெற்றி வாய்ப்பு கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தலை விட பரபரப்பாக உள்ளது நடிகர் சங்கத்தேர்தல். சரத்குமார் ஒரு அணியாகவும், விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன், உள்ளிட்டோர் இணைந்த பாண்டவர் அணியும் மோதுகிறது.

    சரத்குமார் அணி

    சரத்குமார் அணி

    சரத்குமார் அணி சார்பாக தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். ராதாரவி செயலாளர் பதவிக்கு நிற்கிறார். இவர்கள் தவிர சிம்பு துணைத்தலைவர் பதவிக்கும் பொருளாளர் பதவிக்கு கண்ணன் ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர். அதோடு ராம்கி, டி.பி. கஜேந்திரன், ஜாக்குவார் தங்கம், கே.ராஜன் உள்ளிட்டவர்களும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

    பாண்டவர் அணி

    பாண்டவர் அணி

    விஷால் தரப்பில் இருந்து தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். செயலாளருக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் நிற்கின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு பிரசன்னா,ஸ்ரீமன், நடிகைகள் சங்கீதா, குட்டி பத்மினி உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுகின்றனர்.

    விஷால் அணிக்கு ஆதரவு

    விஷால் அணிக்கு ஆதரவு

    நடிகர் சங்கத் தேர்தலில் மறைமுகமாக இதுவரை விஷால் அணியினருக்கு ஆதரவு அளித்து வந்தவர்கள் இப்போது நேரடியாகவே களம் இறங்கியுள்ளதாக தெரிகிறது. கடந்த இருநாட்களுக்கு முன், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விஷால் அணியினர் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களிக்கும் உரிமை கொண்ட நடிக- நடிகையர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதுதான் விஷால் அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

    உறுப்பினர்கள் எண்ணிக்கை

    உறுப்பினர்கள் எண்ணிக்கை

    நடிகர் சங்கத்தின் மொத்தம் உள்ள 3100 உறுப்பினர்களில் சுமார் 2000 உறுப்பினர்கள் நாடக நடிகர்கள். அவர்களின் நன்மதிப்பை பெற்று வைத்திருப்பதாக நம்புகிறார் ராதாராவி.எனவே நிச்சயமாக நாடக நடிகர்களின் வாக்குகளில் 1500 வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என்றும், சினிமா நடிகர்களின் 1100 வாக்குகளில் 500 வாக்குகள் தங்களுக்குக் கிடைக்கும் என்றும், 2000 வாக்குகள் பெற்று நிச்சயம் வெற்றியைப் பெறுவோம் என்பது சரத்குமார் அணியினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

    யாருக்கு ஆதரவு

    யாருக்கு ஆதரவு

    சரத்குமார் அணியினர் சொல்லும் இந்த கணக்கை நிராகரிக்கின்றனர் விஷால் அணியினர்.ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டதாக சொல்கின்றனர். 500க்கும் மேற்பட்ட நாடக நடிகர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றது எதிர்தரப்பு அணியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    சத்யாராஜ் - பாக்யராஜ்

    சத்யாராஜ் - பாக்யராஜ்

    அது மட்டுமல்லல சத்யராஜ், பாக்கியராஜ், நிழல்கள் ரவி, ராஜேஷ், எஸ்.வி. சேகர்,வடிவேலு, ஆர்யா,சந்தானம், டெல்லி கணேஷ்,,ஜெயம் ரவி, டெல்லி கணேஷ், பசுபதி போன்ற முன்னணி நடிகர்களும் இந்த கூட்டத்தில் மேடை ஏறியது விஷால் தரப்பினரை உற்சாகமடைய வைத்துள்ளது. குறிப்பாக சத்யராஜ், பாக்யராஜ், வடிவேலு போன்ற மூத்த கலைஞர்களின் ஆதரவு இளம் தலைமுறை நடிகர்களுக்கு கிடைத்து மிகப் பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

    நடிகர் சிவகுமார்

    நடிகர் சிவகுமார்

    சத்யராஜ், பாக்யராஜ், சிவகுமார் ஆகியோர் ஒரே ஊர்காரர்கள் என்ற ரீதியில் இணைந்துள்ளனர். கோயம்புத்தூர் பாசம்தான் இவர்களை இணைத்துள்ளது. பூர்ணிமாவும் ராதிகாவும் நெருங்கிய நட்பு கொண்டவர்கள்தான். பாக்யராஜுக்கும் ராதிகாவுக்கும் நல்ல நட்பு உண்டு. இருந்தும் சிவகுமார் சொல்லை தட்ட பாக்யராஜ் விரும்பவில்லை அதோடு ஊர்பாசமும் அவரை விஷால் அணிக்கு சாய வைத்து விட்டது.

    வடிவேலு

    வடிவேலு

    அதேபோல சத்யராஜை சரத்குமார் அணி இழந்தது மிகப் பெரிய இழப்பு என்றே கூறப்படுகிறது. விஜயகாந்துடன் நடிகர் வடிவேலு மல்லுக்கு நின்ற போது, சரத்குமார்தான் வடிவேலுக்கு மறைமுகமாக ஆதரவாக இருந்தார். இப்போது அவரும் விஷால் அணிக்கு தாவி விட்டார்.

    இளைய தலைமுறை ஆதரவு

    இளைய தலைமுறை ஆதரவு

    நடிகைகள் தரப்பில் சரண்யா பொன்வண்ணன்,பானுப்பிரியா, குட்டி பத்மினி, கோவை சரளா, சாயாசிங், சபீதா ஆனந்த் ஆகிய நடிகைகள் மட்டுமின்றி இளைய தலைமுறை நடிக- நடிகைகளின் அத்தனை பேரின் ஆதரவையும் விஷால் தரப்பு கைப்பற்றி விட்டதாகவேத் தெரிகிறது.

    விசால் அணியின் பலம்

    விசால் அணியின் பலம்

    தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரை இத்தனை காலம் சினிமாத்துறையில் எந்த சர்ச்சையிலும் சிக்காத பண்பட்ட மனிதர். அவரை தலைவராக நிறுத்தியிருக்கிறது விஷால் தரப்பு. நாசருக்கு கமல் ஆதரவு வெளிப்படையாக கிடைத்திருப்பது கூடுதல் பலம் என்றும் கூறப்படுகிறது.

    கருத்துக்கணிப்பு

    கருத்துக்கணிப்பு

    இதற்கிடையில் தனியார் திரைப்படக்கல்லூரி ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியதாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. அந்த தனியார் திரைப்படக் கல்லூரி எது?என்ன அடிப்படையில் கருத்துக் கணிப்பு நடத்தியது போன்ற விவரங்கள் இல்லை. ஆனால் விஷால் அணிக்கு 64 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், சரத்குமார் அணிக்கு 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.இந்த கருத்துக்கணிப்பு முடிவை விஷால் அணி உற்சாகமாக வாட்ஸ்அப்பில் பரப்பி வருகின்றனர்.

    English summary
    An opinion poll survey has predicted that Vishal team has the upper hand over the Sarath Kumar led team in the Nadigar sangam elections.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X