»   »  இன்று நேற்று நாளைக்கு இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் விஷ்ணு!

இன்று நேற்று நாளைக்கு இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் விஷ்ணு!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஓரளவு சுமாராக ஓடினாலே போதும், அந்தப் படத்துக்கு இரண்டாம் பாகம் என்று மார்தட்டும் காலம் இது.

விஷ்ணு நடித்து ஓரளவு நன்றாகவே ஓடிய இன்று நேற்று நாளை மட்டும் இதில் தப்பிக்குமா என்ன?

இந்தப் படத்துக்கும் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது.

விஷ்ணு

விஷ்ணு

விஷ்ணு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'. இப்படத்தை விஷ்ணுவே தயாரித்துள்ளார். எழில் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

டிரைலர்

டிரைலர்

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ரசிகர்களிடம் கேள்வி

ரசிகர்களிடம் கேள்வி

இந்நிலையில், விஷ்ணு விஷால் தான் நடித்த ‘முண்டாசுப்பட்டி', ‘ஜீவா', ‘இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் எதில் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்.

இன்று நேற்று நாளைக்குதான் ஓட்டு

இன்று நேற்று நாளைக்குதான் ஓட்டு

இதில் பெரும்பாலான ரசிகர்கள் ‘இன்று நேற்று நாளை' படத்திற்கே அதிக ஆதரவை கொடுத்தனர். எனவே ‘இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் ஐடியாவில் இருக்கிறாராம் விஷ்ணு.

English summary
Vishnu has decided to make the sequel for Indru Netru Naalai after fans tremondous response for the same.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos