»   »  அமிதாப், ஐஸ்வர்யாராய்க்கு தடபுடல் விருந்து கொடுத்த பிரபு

அமிதாப், ஐஸ்வர்யாராய்க்கு தடபுடல் விருந்து கொடுத்த பிரபு

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைக்கடை திறப்பு விழாவுக்கு வாங்க... மத்தியான சாப்பாடு நம்ம வீட்லதான்... என்று விளம்பரத்திலேயே அமிதாப், ஐஸ்வர்யா ராயை அழைத்தார் பிரபு சொன்னது போலவே சென்னைக்கு வந்த நட்சத்திரங்களுக்கு தடபுடல் விருந்து கொடுத்து அசத்திவிட்டார் பிரபு.

சிவாஜி கணேசன் உருவப்படத்தை பார்த்து நெகிழ்ந்த அமிதாப் பச்சன், புனிததலத்திற்கு வந்தது போல உணர்ந்ததாக கூறினார்.

நகைக்கடை திறப்பு விழா

கடந்த 17ஆம்தேதி சென்னையில் நடைபெற்ற நகைக்கடை துவக்க விழாவில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய், ஷிவராஜ் குமார், நாகர்ஜூனா, மஞ்சுவாரியார் ஆகியோர் சென்னைக்கு வந்தனர்.

அன்னை இல்லத்தில்

நகைக்கடை திறப்பு விழா முடிந்த பின்னர் நட்சத்திரங்கள் அனைவரும் சிவாஜியின் அன்னை இல்லத்திற்குச் சென்றனர்.

சிவாஜிக்கு மரியாதை

அங்குள்ள சிவாஜியின் திருவுருவப்படத்தை அமிதாப் உள்ளிட்ட அனைவரும் வணங்கி மரியாதை செலுத்தினர்.

தடபுடல் விருந்து

இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மெகா விருந்தளிக்கப்பட்டது. இதில் நாகார்ஜுனா, சிவராஜ் குமார், மலையாள நடிகை மஞ்சு வாரியர், கல்யாண் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் கல்யாணராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வகை வகையான பலகாரங்கள்

மிகப்பெரிய மேஜையில் அனைவருக்கும் ஒரே சமயத்தில் மதிய விருந்து வழங்கப்பட்டது. விருந்தினர்களை ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி குடும்பத்தினர் மிகவும் அன்புடன் கவனித்து வகை வகையான உணவுகளை அவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர்.

புனித தலம் போல

விருந்து உண்ட பின்னர் நன்றி தெரிவித்த அமிதாப் பச்சன், தமிழ் திரை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சிவாஜி அவர்களின் வீட்டிற்கு வந்தது புனித தலத்திற்கு வந்தது போல இருக்கிறது என்று கூறி அனைவரையும் நெகிழவைத்தார்.

English summary
Amitabh Bachchan, who went to Chennai recently, not only got nostalgic about the city, but also visited the house of the legendary actor Sivaji Ganesan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos