»   »  அஜித் அண்ணாவுடன் நடிக்கிறேன்.. ‘தல 57’ ரகசியத்தை போட்டுடைத்தார் விவேக் ஓபராய்!

அஜித் அண்ணாவுடன் நடிக்கிறேன்.. ‘தல 57’ ரகசியத்தை போட்டுடைத்தார் விவேக் ஓபராய்!

தல 57 படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்க இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது.

வீரம், வேதாளம் பட வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இப்படம் தல 57 எனக் குறிப்பிடப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திப் படத்தில் நடித்துள்ள அக்‌ஷரா இப்படம் மூலம் தான் தமிழில் அறிமுகமாகிறார்.

பிரமாண்டம்...

படக்குழுவினரைப் பார்க்கும் போதே படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பது தெரிகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட்டு வருகிறது.

விவேக் ஓபராய்...

இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதனை படக்குழு உறுதி செய்யாமல் இருந்து வந்தது.

முதல் தமிழ்ப்படம்...

இந்நிலையில், தற்போது தானே அஜித் படத்தில் நடிக்கும் தகவலை உறுதி செய்துள்ளார் விவேக் ஓபராய். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விவேக் ஓபராய், இது தொடர்பாக கூறுகையில், "நான் என்னுடைய முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளேன். இந்த படத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அஜித் குமாருடன் நடிக்க உள்ளேன்.

அண்ணா...

நான் அவரை அஜித் அண்ணா என்றுதான் அழைப்பேன். நான் இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் அஜித் அண்ணாவுடன் நடிப்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ரத்த சரித்திரம்...

பாலிவுட்டில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக உள்ள விவேக் ஓபராய்க்கு தமிழ் நன்றாக தெரியும். அவரது தாய் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே, ரத்த சரித்திரம் படத்தில் சூர்யாவுடன் விவேக் ஓபராய் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

English summary
Actor Vivek Oberoi, best known for his work in films such as Company and Rakht Charitra, will make his Tamil debut with Ajith's upcoming yet-untitled next project.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos