twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டி.ராஜேந்தர் குத்தாட்டம் போடும் விழித்திரு…

    By Mayura Akilan
    |

    தேடிக் கொண்டே இருந்தால் தேடல் ஒரு நாள் கிடைக்கும். அந்த விடியல் ஒரு நாள் பிறக்கும் என்று இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

    கிருஷ்ணா, வித்தார்த், தன்ஷிகா, பேபி சாரா, இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் வெங்கட்பிரபு, அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்க மீரா கதிரவன் இயக்கியிருக்கும் படம் 'விழித்திரு'. சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர் இதனை கூறியுள்ளார்.

    இசை, பாடல், இயக்கம் என கலந்து கட்டி அடிக்கும் டி.ராஜேந்தர் முதன்முறையாக மற்றொரு இசையமைப்பாளரின் படத்தில் பாடல் எழுதியுள்ளார். இதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார்.

    ஜெயிக்கணுமா?

    ஜெயிக்கணுமா?

    "வாழ்க்கையில் தொலைஞ்சு போகுது என்று சொல்பவர்களால் ஜெயிக்கவே முடியாது. தொலைந்ததை எவன் ஒருவன் விடாமல் தேடிக் கொண்டிருக்கிறானோ அவன் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிப்பான்.

    விடியல் பிறக்கும்

    விடியல் பிறக்கும்

    காதலில் தோற்றவன் தேடிக்கொண்டே இருந்தால், தேடிக் கொண்டே இருப்பான். அது ஒரு தேடல். கடமைக்காக போராடிவிட்டு ஈழத்தை இன்றைக்கு வரைக்கும் தேடிக்கிட்டே இருக்கிறானே. அதே போல தான், தேடிக் கொண்டே இருந்தால் தேடல் ஒரு நாள் கிடைக்கும். அந்த விடியல் ஒரு நாள் பிறக்கும் என்றார்.

    லா லா லா

    லா லா லா

    இந்தப்படத்தில் இரண்டு இளம் பெண்களுடன் ஆடும் குத்தாப்பாடல் ஒன்றை எழுதி பாடி ஆடியுள்ளார் டி. ராஜேந்தர். பல்லவியில் எல்லாமே லா லா என்று முடியும் வகையில் இருக்கிறது. முதன் முறையாக வேறொரு இயக்குநர், இசையமைப்பாளருக்கு பாடல் எழுதியது ஏன் என்றும் மேடையிலேயே சொன்னார் டி.ராஜேந்தர்.

    பாடல் எழுதியது ஏன்?

    பாடல் எழுதியது ஏன்?

    அந்த தேடல் என்ற உணர்வுமிக்கவனாக, இந்த படத்திலே மீரா கதிரவனிடம் இருந்த அந்த துடிப்பைப் பார்த்து மட்டும் தான் இப்படத்தில் நான் பாடினேன். என்னுடைய படத்திற்கு மட்டும் பாட்டு எழுதிவிட்டு, யாருடைய படத்திற்கு போய் எழுதாதவன் நான். இயக்குநர் கேட்டுக் கொண்டதற்காக 'விழித்திரு' படத்தில் எழுதினேன்.

    தடுக்காதது ஏன்?

    தடுக்காதது ஏன்?

    'ரோமியோ ஜூலியட்' பட இயக்குநர் லஷ்மன் தன்னை என்னுடைய ரசிகர் என்று சொன்னார். படத்திலே ஜெயம் ரவியை என் ரசிகராக காட்டியிருந்தார். என்னுடைய உரிமையை பெறாமல் பயன்படுத்திய என் வசனத்தை வெட்டி விட்டேன் என்று கூறிய அவர், பாட்டைக் கூட வெட்ட வேண்டும் என்றால் வெட்டி இருக்கலாம். ஆனால், அந்த பாட்டை என் உயிராக நினைக்கிறேன் என்று இயக்குநர் லஷ்மன் மற்றும் ஜெயம் ரவி தெரிவித்தார்கள்.

    பெருந்தன்மை

    பெருந்தன்மை

    ஒரு தயாரிப்பாளரை புண்படுத்த வேண்டாம் என்று சங்கத் தலைவர் தாணுவும் கேட்டார். தயாரிப்பாளர் கஷ்டப்படக்கூடாது என்று தான் அப்பாட்டை பெருந்தன்மையோடு விட்டேன்.

    மகனுக்கு நன்றி

    மகனுக்கு நன்றி

    அரைச்ச மாவை அரைப்போமா என்று இயக்குநர் பேரரசு எழுதிய பாட்டு 'வல்லவன்' படத்தில் இடம்பெற்றது. அப்பாடல் மூலமாக என்னுடைய மகன் சிம்பு இந்த தலைமுறைக்கு என்னைக் கொண்டு சேர்ந்துவிட்டார்.

    வெளிச்சம் யாருக்கு?

    வெளிச்சம் யாருக்கு?

    எனக்கு இனிமேல் வெளிச்சம் எல்லாம் தேவையில்லை. யாராவது இருளில் இருந்தால், அவர்களுக்கு என்னுடைய வெளிச்சத்தை காட்டி, அவர்களுக்கு வெளிச்சம் தர வேண்டும் என நினைக்கிறேன்.

    ஒருநாள் இரவு கதை

    ஒருநாள் இரவு கதை

    ஒரு நாள் இரவில் ஒரு கதையைச் சொல்ல முடியும் என்ற இந்தப் படத்திற்கு, நான் ஒரு சின்ன மெழுகுவர்த்தியாக இருக்க வேண்டும் என இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். என்று பேசினார் டி.ராஜேந்தர்.

    இரு நாயகர்கள்

    இரு நாயகர்கள்

    அவள் பெயர் தமிழரசி இயக்கிய மீரா கதிரவனின் அடுத்த படம் விழித்திரு. இதில் விதார்த், கிருஷ்ணா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இருவருக்குமே இணையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.

    தன்ஷிகா - வெங்கட்பிரபு

    தன்ஷிகா - வெங்கட்பிரபு

    இயக்குநர் வெங்கட்பிரபுவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக தன்‌ஷிகா நடிக்க தம்பி ராமையாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    இரவு நேரத்தில் படப்பிடிப்பு

    இரவு நேரத்தில் படப்பிடிப்பு

    படத்தின் தலைப்புக்கேற்ப படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரத்தில் மட்டுமே நடைபெற்றது. முக்கியமான காட்சிகள் அனைத்திலும் நாயகி தன்‌ஷிகாவும் உள்ளார். அதனால் அவர் தினமும் படப்பிடிப்புக்கு வர வேண்டி இருந்தது. இதற்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குநர் மீரா கதிரவன்.

    English summary
    T.Rajendar has written, sang and performed, Paparappa song in Vizhithiru, after many years. It is also notable that the talented stud has written a song for another music director, for the first time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X