twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெல்கம் பேக் பாட்ஷா பாய்! #WelcomeBackBaashhaBhai

    By Shankar
    |

    #பாட்ஷா - 1995ல் ரிலீஸான போது.... கொடைக்கானலில் இருந்தேன். புது வேலை.. வாழ்க்கையில் முதன்முதலாக வேலை செய்ய ஆரம்பித்த, ரஜினி ரசிகர்கள் என்று நண்பர்கள் வட்டாரத்தில் பெரிதாக யாரும் இல்லாத காலம். ஜூ.வி, ஆ.வி என்று படித்து வந்த பாவியாக இருந்த காலம் அது! (அப்போதைய விகடன் வேறு லெவல் என்பது தனி மேட்டர்).

    உள்ளுக்குள் படு தீவீர ரஜினி ரசிகனாக இருந்த பலரும்..... வெளியில் ரஜினி படம் என்றால் வேண்டா வெறுப்பாக பார்ப்பது போல் நடித்துக் கொண்டிருந்த காலம்.
    எப்போதும் போல அறிமுகமான சிலநாட்களிலேயே நான் ரஜினி ரசிகன் என்பதைத் தண்டோரா போடாது சொல்லியிருந்தேன்.

    Welcome Back Baasha Bhai!

    வேன் ட்ரைவர் ஒருவர் .... மதுரை, திண்டுக்கல் என ட்ரிப் அடிப்பவர்... படம் பாத்துவிட்டதாகக் கேள்விப்பட்டு அவரைத் தேடிக் கொண்டிருந்தேன்.... டீக்கடையில் தினத்தந்தியில் படித்த விளம்பரம் ஒன்றில் "ஒரே ஒரு பாட்ஷா(ரஜினி)தான் படவுலகுக்கெல்லாம்" என்ற விளம்பரம் வேறு காய்ச்சலைக் கூட்டிக் கொண்டிருந்தது..
    ஒருவழியாக... கிட்டத்தட்ட 10நாட்களில் லீவ் எடுத்துக் கொண்டு மதுரை சென்றடைந்தேன். அடுத்த நாள் அம்பிகாவில் ஷோ... முட்டிமோதி டிக்கெட் வாங்கி உள்ளே ஓட்டம்.

    Superstar டைட்டிலில் ஆரம்பித்த அந்த "ரோலர் கோஸ்ட்டர்" ஓட்டம்...உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊற்றெடுத்து ஓடியது.

    ரஜினி என்றாலே சுறுசுறுப்பு, பரபரப்பு என்று இருக்கும்... பாட்ஷாவில் அது அதிகம் இருப்பதாகவே நான் நினைகின்றேன்.

    நான் ஆட்டோக்காரனில் ஆரம்பிக்கும் அந்த வேகமும், உற்சாகமும்...அடுத்தடுத்த காட்சிகளிலும் தொடரும் ( கடன் கேட்கும் தாமுவிடம் பேசும் காட்சி, தம்பியை வரவேற்கும் காட்சி, நக்மாவுடன் ஆட்டோவில் போகும் காட்சி என சொல்லிக் கொண்டே போகலாம்).

    அப்போதைய காலகடத்தில் "ஒரு தடவை சொன்னா" என்று விஷ்க் விஷ்க்வென நடப்பதும், வாட்யா என காமெடியாக நண்பர்களிடம் பேசுவதும்தான் படத்தின் சிறந்த 'பஞ்ச்' ஆக எண்ணிக்கொண்டிருந்தேன்...

    ஆனால் காலப்போக்கில் பாலகுமாரனின் வசனம் ....அதை ரஜினி உச்சரிக்கும் பாங்கு எத்தகைய வீச்சு நிறைந்தது என்பதை உணர்த்தியது.

    இப்போதும் ..

    1. எனக்கு இன்னொரு பேர் இருக்கு
    2.உண்மைய சொன்னேன்.
    3. நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்
    4. கொஞ்சம் அங்கே பாரு கண்ணா
    5. சேர்த்த கூட்டம் இல்லை...
    6. இந்தியனாச்சே...
    7. வாழ்க்கைல பயம் இருக்கலாம்.. ஆனால், பயப்படறதே வாழ்க்கையாகிடக் கூடாது
    8. மன்னிக்கறதுக்கு நான் பாட்ஷா இல்லை
    9. சொல்லுங்க... சொல்லுங்க...
    10. நாடி, நரம்புல சண்டை வெறி ஊறிப்போன ...

    பஞ்ச்கள் பிரபலமாகவே இருக்கின்றன.

    ஒரு மாஸ் ஹீரோவுக்கான படம் எப்படி இருக்க வேண்டுமென்பதை ரஜினியின் படங்களில் (மட்டுமே) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.... அதில் "பாட்ஷா"விற்குத்தான் முதலிடம்.

    இப்போது...லண்டனில் படம் ரிலீஸாகியுள்ளதா எனத் தேடும் அளவிற்கு பாட்ஷா ஜூரம் ஆரம்பம். Youtube என்ற பாராசிட்டாமல்தான் மருந்து.

    கொடைக்கானலில் சீனியர் ஒருவர்... எப்போதும் என்னிடம் ஓசி புக் வாங்கிப் படிப்பவர்...

    "ஏம்பா, அடுத்த ரஜினி படம் பேரு... 'பாட்சா'வாம்ல ! என்று ஒரண்டையை ஆரம்பித்தார்
    -அண்ணே, அது 'பாட்ஷா'ண்ணே என்று சொன்னதற்கு..

    " அடப்போப்பா... பாட்சா, பல்லினு பேரு வச்சுக்கிட்டு... இனிமேல் ரஜினி பாட்ச்சால்லாம் பலிக்காது" என்று அவர் சொன்னது 1994 வருடம்.

    இதோ, 22 வருடங்கள் கழிந்து..... மீண்டும் 'பாட்ஷா' பராக்! பராக்! பராக்!

    - ராம் சுவாமிநாதன்

    English summary
    A fans write on Rajinikanth's Baasha re release after 22 years!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X