»   »  திலீப், காவ்யா திருமணம் நடந்தபோது நடிகை மஞ்சு என்ன செய்து கொண்டிருந்தார்?

திலீப், காவ்யா திருமணம் நடந்தபோது நடிகை மஞ்சு என்ன செய்து கொண்டிருந்தார்?

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருச்சூர்: நடிகர் திலீப் நடிகை காவ்யா மாதவன் திருமணம் நடந்தபோது நடிகை மஞ்சு வாரியர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

நடிகர் திலீப் தனது காதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியரை பிரிய நடிகை காவ்யா மாதவனே காரணம் என்று மல்லுவுட்டில் பேசப்பட்டது. இந்நிலையில் திலீப் கடந்த வெள்ளிக்கிழமை காவ்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் குடும்பத்தார் மற்றும் ஒரு சில நடிகர்களே கலந்து கொண்டனர்.

திருமணம்

திலீப், காவ்யா மாதவனின் திருமணம் ஒரு திடீர் திருமணம். அவர்கள் திரையுலகை சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்தனர். அதுவும் வியாழக்கிழமை இரவு தான் போன் செய்து அழைத்துள்ளனர்.

மஞ்சு

மஞ்சு வாரியர் கேர் ஆப் சாய்ரா பானு என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் மூலம் ரஜினி, கமலுடன் ஜோடியாக நடித்த அமலா பல ஆண்டுகள் கழித்து மல்லுவுட்டில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

படப்பிடிப்பு

கேர் ஆப் சாய்ரா பானு படப்பிடிப்பில் இருந்தபோது வியாழக்கிழமை மதியமே திலீப்பின் திடீர் திருமணம் குறித்து படக்குழுவினருக்கு தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அறிந்த மஞ்சு அதிர்ச்சி அடையாமல் அமைதியாக தனது வேலையை செய்துள்ளார்.

செல்போன்

அன்றைய நாள் பட்பிடிப்பு முடிந்த பிறகு மஞ்சு நேராக திருச்சூரில் உள்ள தனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றுள்ளார். தனது செல்போனை அவர் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

லைவ் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை காலை திலீப், காவ்யாவின் திருமண நிகழ்ச்சி மலையாள டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை மஞ்சு வாரியரும் லைவாகவே பார்த்துள்ளார்.

English summary
Actress Manju Warrier watched her former actor husband Dileep, actress Kavya Madhavan's wedding programme live on TV on friday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos