twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்தக் காலத்துலப்பா இருக்கீங்க.....!?

    By Sudha
    |

    சென்னை: தமிழ் சினிமாக்காரர்களுக்கு குறிப்பாக இந்தத் தயாரிப்பாளர்களுக்கு அவ்வப்போது "கோவம்" பொத்துக் கொண்டு வந்து விடும். அதற்கெல்லாம் காரணத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது.. ஆனால் வருகிற கோபம் நியாயமானதாக இருக்கிறதா என்றால் அதுவும் இருக்காது. அப்படித்தான் இப்போதும் ஒரு கோவம் அவர்களுக்கு வேகமாக பீறிட்டு வந்துள்ளது. இதற்கும் கூட நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

    ஆனால் என்ன காமெடி என்றால் இந்தக் கோபம் கொஞ்சம் கூட நியாயமானதாக இல்லை என்பதுதான். இதனால்

    கோபமும் அழகுதான்.. ஆனால் அந்தக் கோபம் நியாயமானதாக, நேர்மையானதாக இருந்தால் ரசிக்கக் கூட செய்யலாம். ஆனால் இவர்களின் கோபம் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது.

    "நெட்டு" வேண்டாம்

    இப்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கூடி ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளனர். அதாவது, இனி தமிழ் சினிமா நிகழ்ச்சிகளுக்கு இணையதளப் பத்திரிகையாளர்களை அழைக்கவே கூடாது என்பதே அது.

    அடிப்படையே புரியலையே!

    அடிப்படையே புரியலையே!

    இந்த முடிவுதான் அனைவரையும் சிரிப்புக்குள்ளாக்கி வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது. தடுக்கி விழுந்தால் ஒரு டிவிட்டரிலோ அல்லது பேஸ்புக்கிலோ அல்லது இமெயிலிலோ தான் விழ வேண்டியுள்ளது. பேனாவும், பேப்பருமாக திரிந்த காலமெல்லாம் போய் இப்போது மவுசும், மானிட்டருமாக மக்களின் வாழ்க்கையில் இன்டர்நெட் ஒரு அங்கமாகி பல காலம் ஆகிறது.

    பழம் பஞ்சாங்கமாக

    பழம் பஞ்சாங்கமாக

    ஆனால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மட்டும் (அவர்களில் சிலருக்கு இன்டர்நெட்டின் முக்கியத்துவம் புரிந்தாலும் கூட பெரும்பான்மை முடிவை இவர்களால் எதிர்க்க முடியாத அளவுக்கு கிடுக்கிப்பிடி பிளஸ் நெருக்கியடி ஜாஸ்தி) இன்னும் பழம் பஞ்சாங்காமாக இருப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சத்தியமாக அவர்கள் மீது கோபமே வரவில்லை, மாறாக அடப் பாவமே இப்படி ஒரு மண்ணும் தெரியாத பச்சைப் புள்ளைகளாக உள்ளனரே என்ற ஆற்றாமைதான் ஏற்படுகிறது.

    ஏன் இந்தத் திடீர் கோவம்...!

    ஏன் இந்தத் திடீர் கோவம்...!

    இன்றைக்கு தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகின் அத்தனை மொழிப் படங்களுக்கும் செய்திகள், விளம்பரம், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் இணைய தளங்கள்தான் முதல் வாயிலாக உள்ளன. சினிமா தொடர்பான செய்திகளை இணையதளங்கள் மூலமே வெளிநாட்டு ரசிகர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

    வருஷா வருஷம்...!

    வருஷா வருஷம்...!

    இந்த நிலையில், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை, இணையதள பத்திரிகையாளர்களை இனி எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கவே கூடாது என கூறுவதும், பின்னர் சத்தமின்றி அழைப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    முதல்ல கம்ப்யூட்டர்களைத் தூக்கிப் போட்டு உடைங்க பாஸ்!

    முதல்ல கம்ப்யூட்டர்களைத் தூக்கிப் போட்டு உடைங்க பாஸ்!

    சரி இணையதளம் வேண்டாம், இணையதள ரிப்போர்ட்டர்களும் வேண்டாம், அவர்களுக்குச் செய்தியும் தர வேண்டாம் என்ற அவர்களின் வாதத்திற்கே வருவோம். அப்படியானால் இவர்கள் இனிமேல் இணையதளத்தைப் பார்க்கவே மாட்டார்களா, மெயில்களை பயன்படுத்தவே மாட்டார்களா.. இணையதளத்தில் போய் எதையுமே பார்க்கவே மாட்டார்களா... இவர்களது சினிமா குறித்த செய்திகளை இன்டர்நெட்டில் யாருமே பார்க்க வேண்டாமா.. இந்த வாரத்தில் வெளியாகும் படங்கள் என்று இன்டர்நெட்டில்தானே விலாவாரியாக சொல்லி ஓசியில் பிரபலப்படுத்துகின்றன இணையதளங்கள்.. அது வேண்டாமா...!

    பூனை கண்களை மூடிக் கொண்டால்...!

    பூனை கண்களை மூடிக் கொண்டால்...!

    பூனை தனது கண்களை மூடிக் கொண்டால் உலகமே இருட்டாக இருக்கும் என்று நினைக்குமாம். அது போலத்தான் உள்ளது இந்த பத்தாம் பசலித்தனமான முடிவு. தயாரிப்பாளர்கள் என்பது ஒரு குறுகிய உலகம்.. இந்த உலகுக்குப் பெரும் பலம் சேர்க்கும் ஆயுதங்களில் இந்த இணையதள மீடியாவும் ஒன்று என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை...!

    முதலில் பார்க்கும் மீடியா இதுதானே

    முதலில் பார்க்கும் மீடியா இதுதானே

    இன்று காலையில் எழுந்ததும் பேப்பர் பார்த்து எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கு முன்னரே கையில் இருக்கும் ஆன்ட்ராய்டை ஆன் செய்து மெசேஜ், செய்தி பார்க்கும் பழக்கம்தான் நம்மிடம் அதிகம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு இவர்களது சினிமா குறித்த செய்திகளை கொடுக்க வேண்டாம் என்று இவர்கள் சொல்வது இவர்களது விரலை விட்டே இவர்களது கண்களை குத்திக் குடைவது போலாகாதா....!

    ஆளும் வளரனும், அறிவும் வளரனும் சாமி!

    ஆளும் வளரனும், அறிவும் வளரனும் சாமி!

    ஆள் வளர வளர அறிவும் வளர வேண்டும் என்பார்கள். எனவே, எதையோ நினைத்துக் கொண்டு எதையோ இடிப்பது போல இப்படி எதற்குமே பிரயோஜனம் இல்லாத முடிவுகளை எடுப்பதை விட்டு விட்டு, ஏழை எளிய தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது திட்டம் தீட்டலாம். ராத்திரி போட்ட தாப்பா.. பகல்ல பார்த்த பாப்பா, கள்ளப் புருஷன் என்பது போன்ற "படங்களை" எடுத்து மக்களைக் கெடுக்காமல் இருக்க முயற்சிக்கலாம். நல்ல நல்ல சினிமாக்களை எடுத்து நல்ல பெயரை வாங்கப் பார்க்கலாம்.

    "இன்டர்காமை"க் கூப்பிடாதே...!

    முன்பும் கூட இப்படித்தான் ஒரு பிரச்சினை வெடித்தது. அப்போது நடந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் ஒருவர் படு கோபமாக, இனிமேல் இந்த "இன்டர்காமை" (அதாவது இன்டர்நெட்டைத்தான் இன்டர்காம் என்று சொல்றாராமாம்) எல்லாம் கூப்பிட வேண்டாம் என்று சத்தமாக பேசினார். அவர் பேசியதைப் பார்த்து, அவரது "அறிவு"த்திறனைப் பார்த்து அங்கிருந்த அனைவருமே சிரித்துக் கொண்டனர். அந்த அளவுக்குத்தான் அவர்களுக்கு "கிராஸ்" ஞானமும், "நெட்" ஞானமும் உள்ளது...!

    எனவேதான் மெய்யாலுமே சொல்கிறோம், இப்போது நினைத்தால் கூட இவர்களைப் பார்த்து பாவமாக இருக்கிறது.. சத்தியமாக கோபமே வரவில்லை!

    English summary
    Tamil film producer council has barred Internet media from news coverage ot the films produced by the members of the council. But is this a wise decision?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X