twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெறி அரசியல் படமா... சத்ரியன் ரீமேக்கா? என்ன சொல்றார் அட்லீ?

    By Shankar
    |

    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் போலீஸ் பின்னணியில் உருவாகிறது... அதுவும் ஒரு குழந்தைக்குத் தந்தையாக விஜய் நடிக்கிறார் என்று தகவல் வெளியான உடனே இந்தப் படம் சத்ரியன் படத்தின் ரீமேக் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

    காரணம் அட்லீயின் முதல் படம் அப்படி. இது எந்தப் படத்தின் ரீமேக்கும் இல்லை என்று சொல்லியிருந்த அட்லீ, கிட்டத்தட்ட 80 சதவீதம் மௌன ராகத்தை காப்பியடித்திருந்தார்.

    What kind of movie is Theri?

    இப்போது தெறி சத்ரியன் படத்தின் ரீமேக் என்று கூறுவதை மறுக்கும் வகையில், அட்லீ ஒரு விளக்கம் சொன்னார் இசை வெளியீட்டு விழாவில்.

    அந்த விளக்கம்...

    "தெறி இதைப் பத்தின படம்.. அதைப் பத்தின படம், அப்படி ஓடும்.. இப்படி ஓடும்னெல்லாம் சொல்றாங்க. ஒரு இயக்குநரா நான் இப்ப சொல்லலாம்னு நெனைக்கறேன். தெறில நான் என்ன சொல்ல வர்றேன்னா.. இது எந்த அரசியல் சார்ந்த படமும் அல்ல. யாரையும் குறிப்பிட்ட படமும் அல்ல.

    அடிப்படையா நான் யோசிச்சது என்னன்னா, கொள்ளை அடிக்கறவன், கொல பண்றவன், ரேப் பண்றவன், குடிகாரன் செயின் அடிக்கறவன்னு எந்தத் தப்ப பண்றவனா இருந்தாலும் அவன் யாரோ ஒருத்தரோட புள்ளையாத்தான் இருப்பான். ஒழுங்கா நம்ம புள்ளைய வளர்க்கலைன்னா, நாடு நாசமாத்தான் போகும். கீழதான் போய்ட்டே இருக்கும். அவனைத் திருத்துவோம், இவனைத் திருத்துவோம்னெல்லாம் இல்லாம, நம்ம புள்ளைய நல்லா வளர்த்துவோம். அதை சொல்றதுதான் தெறி. Its about a Good Father. ஒரு நல்ல தந்தையா இருந்தாலே நாட்டை எங்கயோ கொண்டு போலாம். இதத்தான் நான் சொல்ல நினைக்கறேன். அதுதான் ‘தெறி", என்றார்.

    இப்ப சொல்லுங்க.. இதில் சத்ரியன் சாயல் தெரியுதா?

    English summary
    Is Theri a copy of Vijayakanth's Kshatriyan? Here is director Atlee's explanation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X