»   »  பாபா ராம்தேவுடன் மோதி மண்ணைக் கவ்விய நடிகர் ரன்வீர் சிங்

பாபா ராம்தேவுடன் மோதி மண்ணைக் கவ்விய நடிகர் ரன்வீர் சிங்

Posted by:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலிவுட்டின் பவர்ஹவுஸான ரன்வீர் சிங்கையே டயர்டாக்கி ஓரமாக உட்கார வைத்துவிட்டார் யோகா குரு பாபா ராம்தேவ்.

பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் துருதுருவென இருப்பவர். அவரை பார்ப்பவர்கள் எல்லாம் கேட்கும் ஒரே கேள்வி இந்த ஆளுக்கு சோர்வே ஏற்படாதா என்பது தான். அப்படிப்பட்டவரையே சோர்வடைய வைத்துவிட்டார் யோகா குரு பாபா ராம்தேவ்.

அப்படி என்ன செய்தார் ராம்தேவ் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

நடனம்

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாபா ராம்தேவும், ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டனர். ரன்வீர் பாபா ராம்தேவை குறைத்து மதிப்பிட்டு தன்னுடன் நடனமாடுமாறு அழைத்தார்.

பாபா ராம்தேவ்

முதலில் தயங்கிய ராம்தேவ் பின்னர் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ரன்வீர் சிங்கின் படப் பாடலுக்கு அவருடன் சேர்ந்து யோகாடனம்(யோகா+நடனம்) ஆடினார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்கும் ராம்தேவுக்கு ஈடு கொடுக்க முயன்று அவரை போன்றே யோகாடனம் ஆடினார். ஆனால் ரன்வீர் சிங் ராம்தேவ் போன்று உடலை வளைக்க முடியாமல் சோர்வடைந்தார்.

சோர்வு

ரன்வீர் சிங் திணறியதை பார்த்த ராம்தேவ் அவரை அலேக்காக தூக்கி தனது தோளில் வைத்து சுற்று சுற்றி சோபாவில் அமரவைத்துவிட்டு சென்றுவிட்டார். அடேங்கப்பா, ரன்வீர் சிங்கையே அடக்கி உட்கார வைத்துவிட்டாரே ராம்தேவ் என்று பாலிவுட்காரர்களால் தங்களின் வியப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

English summary
Bollywood hero Ranveer Singh who is known for his high energy level couldn't match up with Yoga guru Baba Ramdev in a dance battle.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos