»   »  ஆளானப்பட்ட அமிதாப் பச்சனையே அழ வைத்த நடிகை கங்கனா ரனாவத்

ஆளானப்பட்ட அமிதாப் பச்சனையே அழ வைத்த நடிகை கங்கனா ரனாவத்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கங்கனா ரனாவத் நடித்துள்ள தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தை பார்த்து நடிகர் அமிதாப் பச்சன் கண்ணீர் விட்டுள்ளார்.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மாதவன், கங்கனா ரனாவத் நடித்த தனு வெட்ஸ் மனு படம் ஹிட்டானது. இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார் ஆனந்த். தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் என்று தலைப்பிட்ட அந்த படம் கடந்த 21ம் தேதி ரிலீஸானது.

கங்கனா இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் ரிலீஸான 5 நாட்களில் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளது.

கங்கனா

தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் கங்கனாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஏற்கனவே 2 தேசிய விருது வாங்கியுள்ள கங்கனாவுக்கு மூன்றாவது விருது கிடைக்கும் என்கிறார்கள்.

அமிதாப் பச்சன்

தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தை பார்த்த அமிதாப் பச்சன் கங்கனாவின் நடிப்பை பார்த்து அசந்துவிட்டார். இதையடுத்து அவர் கங்கனாவை பாராட்டி இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். படத்தில் வரும் கங்கனாவின் இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை போட்டு கடிதம் எழுதியுள்ளார்.

கண்ணீர்

படத்தை பார்த்து நான் மிகவும் அரிதாக தான் அழுவேன். உங்களின் நடிப்பை பார்த்து என் கண்களில் தானாக கண்ணீர் வந்தது. கங்கனா இருக்கும் சினிமா துறையில் நான் இருக்கிறேன் என்று நினைக்கையில் நான் பாக்கியசாலி தான் என்று அமிதாப் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பதக்கங்கள்

அமிதாப் பச்சன் போன்ற ஜாம்பவான் என்னை பாராட்டி இரண்டு கடிதங்களை எழுதி அனுப்பியுள்ளார். அவற்றை நான் ஃபிரேம் செய்து வீட்டில் மாட்டப் போகிறேன். என்னைப் பொறுத்த வரை அவை இரண்டும் கடிதங்கள் அல்ல பதக்கங்கள் என்கிறார் கங்கனா.

க்வீன்

நான் நடித்த க்வீன் படத்தை பார்த்த பிறகும் அமிதாப் பச்சன் எனக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது. தற்போது எழுதிய கடிதங்களை அவர் இந்தியில் எழுதியுள்ளார். என்னை பாராட்டி கவிதையும் எழுதியுள்ளார் என்று கங்கனா கூறியுள்ளார்.

English summary
Amitabh Bachchan was moved to tears after watching Kangana Ranaut's acting in Tanu weds Manu returns. He wrote two letters to Kangana aprreciating her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos