»   »  நயனின் ”மாயா” படம் “ஆத்மா” வின் கதையா?- குழப்பத்தில் ரசிகர்கள்!

நயனின் ”மாயா” படம் “ஆத்மா” வின் கதையா?- குழப்பத்தில் ரசிகர்கள்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாயா... பேரே மாயமும், மர்மமுமாய் கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கின்றது. நயன்தாரவும் அவரைச் சார்ந்த கதைக்களமுமாக இப்படம் திரில்லராக உருவாகியுள்ளது.

பொதுவாக தமிழ் சினிமாவில் கதைநாயகிகள் கொண்ட படங்கள் 80 மற்றும் 90 களில் மட்டுமே அதிகம். அதற்குக் காரணமானவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர்.


அதன்பின்னர் கொஞ்ச கொஞ்சமாக மறைந்துபோன இந்தக் கலாச்சாரம் தற்போதுதான் தலையெடுக்கத் துவங்கியுள்ளது.


வித்திட்ட கதைநாயகிகள்:

அதற்கு அச்சாரமாக வந்ததுதான் ஜோதிகாவின் "36 வயதினிலே". ரீமேக் என்றாலும் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பினைப் பெற்றது. அதன்பிறகு தற்போது இரண்டாவதாக கதை நாயகியைக் கொண்டு வரவுள்ளது "மாயா" திரைப்படம்.


எங்களுக்கும் பிடிக்கும்ல:

பெண்களுக்கு மட்டுமே பேய் பிடிக்கும் என்ற நிலை மாறி தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாக ஆண் கதாநாயகர்களுக்கும் பேய் பிடித்து வந்தது.


யார் பேய்?:

இந்நிலையில் "மாயா" திரைப்படம் மீண்டும் ஒரு பெண் சார்ந்த பேயின் கதைக்களம்தான் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.


ஆரிதான் ஹீரோவாம்:

இந்நிலையில் நயன்தாரா, ஆரி நடிப்பில் உருவாகி வருகின்ற இப்படத்தில் டிரெய்லரும் வெளியாகி மக்களின் இதயத் துடிப்பினை அதிகப்படுத்தியுள்ளது.


மாற்றம் தரும் மாயா:

ஏற்கனவே கஹானி தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாராதான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். அந்தப் படம் "நீ எங்கே என் அன்பே" வெளியாகியதா, இல்லை முடங்கிவிட்டதா என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. ஆனால், மாயா திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய வரவேற்பினை பெற்றுத் தரும் என்கின்றனர் படக்குழுவினர்.


இது இந்திப்படமாம்:

ஆனால், நம்முடைய இந்திப் படம் பார்க்கும் மக்களோ இப்படம் பிபாஷா பாஷுவின் நடிப்பில் வெளிவந்த "ஆத்மா" திரைப்படம்தான் என்று அடித்துச் சொல்கின்றனர்.


நயனும், பிபாஷாவும்:

தமிழுக்காக சில மாற்றங்களைச் செய்திருந்தாலும், நிறைய இடங்களில் அப்படத்தினை பிரதிபலிக்கின்றது மாயாவின் "டிரெய்லர்". முதல் விஷயம் ஆத்மா படத்தில் பிபாஷாவின் பெயர் மாயா. அவரும் அப்படத்தில் குழந்தையுடன் தனியாக வசித்து வருவார்.


குழந்தையை மீட்கப் போராடும் தாய்:

சைக்கோ கணவன் இறந்தபிறகும் குழந்தைக்காக மாயாவான பிபாஷாவினை துரத்துவார். அவரிடமிருந்து குழந்தையை பிபாஷா எப்படி மீட்டார் என்பதுதான் "ஆத்மா" படத்தின் கதை.


படம் வரட்டும் பார்க்கலாம்:

எனினும், மாயா படம் ஆத்மா படத்தின் கதைக்கரு சார்ந்ததுதானா என்பது வெளியானால் தெரிந்துவிடும். மாயா திரைப் படத்தை அஸ்வின் சரவணன் எழுதி, இயக்கியுள்ளார். இசை ரான் ரோஹான். எடிட்டிங் சுரேஷ். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.


English summary
The upcoming Tamil film Maya whether the remake of the Hindi film Adhma.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos