»   »  ரஜினி ரஞ்சித்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன தெரியுமா?

ரஜினி ரஞ்சித்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன தெரியுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா. ரஞ்சித்துடன் பணியாற்றுவது சவுகரியமாக உள்ளதால் அவர் படத்தில் மீண்டும் நடிக்க முடியுமா என ரஜினிகாந்தே அவரை அழைத்து கதை இருக்கிறதா என்று கேட்டாராம்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஹிட்டானது. இந்நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் 2.0 படத்தை முடித்த பிறகு ரஜினி மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார்.

படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அது எப்படி ரஞ்சித்துக்கு உடனே மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ரஜினி என்று பலரும் வியக்கிறார்கள். இந்நிலையில் தான் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கபாலி

கபாலி

கபாலி ரிலீஸான சில வாரங்களில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஞ்சித்துக்கு போன் செய்து வீட்டிற்கு வந்து தந்தையை பாருங்கள் என்று கூறியுள்ளார்.

ரஞ்சித்

ரஞ்சித்

ரஞ்சித்தும் ரஜினியின் வீட்டிற்கு வந்துள்ளார். ரஞ்சித் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் சவுகரியமாக உள்ளது. கபாலி பட வெற்றியை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

மறுபடியும்?

மறுபடியும்?

ஏன் ரஞ்சித், நாம மறுபடியும் சேர்ந்து படம் பண்ணுவோமா? உங்களிடம் ஏதாவது கதை உள்ளதா என்று ரஜினி கேட்டுள்ளார். உடனே குஷியான ரஞ்சித் ஒரு வரியில் கதையை சொல்ல அது ரஜினிக்கு பிடித்துவிட்டது. உடனே திரைக்கதையை தயாரிக்குமாறு ரஜினி கூற ரஞ்சித் அதற்கான வேலையில் இறங்கிவிட்டார்.

திரைக்கதை

திரைக்கதை

ரஞ்சித் திரைக்கதையை எழுதி முடிக்க சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Rajinikanth has chosen director Pa. Ranjith again as he feels very comfortable working with the young man.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos