twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விசாரணை படத்தை ஏன் பார்க்கவேண்டும்?

    By Mayura Akilan
    |

    சென்னை: வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள விசாரணை திரைப்படத்தை பாராட்டாத பிரபலங்கள் இல்லை. மணிரத்னம், ரஜினி, கமல், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தொடங்கி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்வரை விசாரணை படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற இப்படம் பிப்ரவரி 5 வெளியானது. இப்படத்தைப் பார்த்த பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளையும், இயக்குநர் வெற்றிமாறனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

    இப்படம் தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து 4.6 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். மேலும், முதலில் 180 திரையரங்குகளில் வெளியான இப்படம் இப்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு 215 அரங்குகளாக ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மிஷ்கின் பாராட்டு கடிதம்

    மிஷ்கின் பாராட்டு கடிதம்

    சர்வதேச அரங்குகளின் கதவுகளை கடந்து பத்து வருடங்களாகத் தட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்போது ஒரு வெடிகுண்டை அந்த கதவுகளில் பொருத்துகிறேன். அதன் பெயர் 'விசாரணை'" என்று வெற்றிமாறனுக்கு இயக்குநர் மிஷ்கின் உணர்வுபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    விவாதமான சகாயம் கருத்து

    காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரம்பற்ற அதிகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. காவல் விசாரணையில் அத்துமீறல்களை மட்டுப்படுத்தும் சீர்திருத்த சட்டங்களே இப்போது தேவை என்று கூறியிருந்தார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இந்த கருத்தை மையமாக வைத்து ஊடகங்களில் விவாதம் நடைபெற்றது.

    ராம் எழுதிய விசாரணை விமர்சனம்

    இந்தப்படத்திற்கான மறியாதையை இந்த விமர்சனத்தில் கொடுத்திட முடியுமா என்கிற ஒரு பயத்தோடும், தயக்கத்தோடும் தான் இதை எழுதுகிறேன்.
    என் சினிமா வயது பத்து. இந்த பத்து வருடங்களில் நல்ல சினிமா மீது ஆரம்ப காலத்தில் இருந்த என் பார்வைக்கும் இன்றை என் பார்வைக்கும் நிறைய வித்தியாசத்தை உணர்கிறேன். நல்ல சினிமா என்கிற புரிதல் எனக்குள் உருவாணதற்கு சில படங்கள்தான் காரணம். அப்படியாக நான் பார்த்த படங்களில் விசாரனையை முதலிடத்தில் வைக்கிறேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் ராம். இப்படியொரு படத்தை எடுத்ததற்காக வெற்றிமாறனுக்கு முன் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கிய காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் போல் நானும் வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஜோதிமணியின் ஆசை

    தீவிரமான தேர்தல் பணிகளுக்கு இடையே 'விசாரணை' படம் பார்க்கவேண்டும் என்கின்ற ஆர்வம் எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கிறது.

    இயக்குநர் முருகதாஸ் பாராட்டு

    விசாரணை திரைப்படம் மிகச்சிறந்த படம் என்று பாராட்டியுள்ளார் கத்தி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

    ரசிகர்களின் பாராட்டு

    மனித உரிமை ஆர்வலர்களைப் பற்றி கேலியாகப் பேசுபவர்கள் விசாரணை படம் பார்க்கவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாகும்.

    போலீஸ் மீதான பயம்

    வாழ்க்கையில் போலீஸ் ஸ்டேசன் பக்கமே போகக்கூடாது என்று சபதம் போட்டுக்கொண்டுதான் வருகின்றனர் ரசிகர்கள்.

    English summary
    Visaranai movie has got very good response from not only the fans but from VIPs of the society too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X