twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி 2: படமா.... தமிழ் சினிமாவுக்கு பாடமா?

    By Shankar
    |

    இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ஏப்ரல் 28 அன்று பல்வேறு மொழிகளில் ரீலீஸ் ஆக உள்ள படம் பாகுபலி - 2. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 70 சதவீதமான தியேட்டர்களில் படம் வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிற மொழிகளில் என்ன வசூல் ஆகும் என்பதன் அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த படத்தின் விலையும், தியேட்டர்களில் திரையிட கேட்கப்படும் அட்வான்ஸ், எம்.ஜிக்கள் வியாபார தர்மத்திற்கு எதிராக, வரம்பு மீறி கேட்கப்படுகின்றது. இதைக் கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

    Will Bagubali 2 earn profit in Tamil?

    உதாரணத்துக்கு, புதுக்கோட்டையில் பாகு பலி திரையிட ரூ 45 லட்சம் எம்.ஜி.அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளுக்கு எதிராக 100 ரூபாய்க்கு டிக்கட் விற்றால் 45000 ம் பேர் படம் பார்த்தால் மட்டுமே ரூ 45 லட்சம் மொத்த வசூல். வரி, வாடகை 15 லட்சம் ஆக 60 லட்சம் மொத்த வசூல் ஆனால் மட்டுமே அசல் தேறும். அதற்கான வாய்ப்பு இல்லாத போது ஆர்வக் கோளாறு காரணமாக படத்தை திரையிட்டு நஷ்டமடைந்து விட்டு பின் போராட்டம் நடத்தி பிரயோசனம் இல்லை என்கின்றனர் எம்.ஜி. முறையில் படம் திரையிடுவதை எதிர்க்கும் தியேட்டர் உரிமையாளர்கள்.

    இது போன்ற நிலைதான் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. பாகுபலி முதல் பாகம் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை 13.50 கோடிக்குத்தான் தேனான்டாள் பிலிம்ஸ் முரளி 2015ல் வாங்கினார். தற்போது கிரீன் ஸ்டுடியோ சரவணன் ரூ 46 கோடிக்கு வாங்கி 47.50 கோடிக்கு வியாபாரம் செய்து விட்டார்.

    இருப்பினும் ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பாளருக்கு சரவணன் ரூ 46 கோடியை செலுத்த முடியாத நிலையில் தென்னிந்திய உரிமை வாங்கிய ராஜராஜன் வசமே பாகுபலி - 2 திரும்பிவிட்டது. படம் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகுமா ஆகாதா, கிரீன் ஸ்டுடியோ சரவணன் வசம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் போட்ட விநியோகஸ்தர்கள் நிலை என்னவாகும்?

    உலகமே எதிர்பார்க்கும் பாகுபலி - 2 தமிழ்நாட்டில் வியாபாரம் செய்யப்பட்டதில் ஆர்வக் கோளாறும், வியாபார நாணயம், தர்மங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளன. இதனைச் சரிசெய்ய வேண்டிய, ஒழுங்குபடுத்தி ஆலோசனை கூற வேண்டிய திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு அத்து மீறியிருக்கிறது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிலரது நலன் காக்கவே கூட்டமைப்பு செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு உண்மையோ என எண்ணத் தோன்றுகிறது என்கிறார்கள் சினிமா வர்த்தகர்கள். பாகுபலி 2 விஷயத்தில் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு, லாபகரமாக வியாபாரம் முடிக்கப்பட்ட பாகுபலி - 2 பற்றாக்குறை ஏரியாவுக்கு கூடுதலாக 1 கோடி தர வேண்டும் என்று விநியோகஸ்தர்களுக்கு அன்புடன் அறிவுறுத்தப்பட்டதன் பின்ணனி என்ன? நாளை முழு தகவல்களுடன்...

    - ஏகலைவன்

    English summary
    Will Bagubali 2 earn profit in Tamil Nadu like its prequel? Here are the business issues behind this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X