»   »  பாயுமா பாகுபலி 2? பதட்டத்தில் விநியோகஸ்தர்கள்!!

பாயுமா பாகுபலி 2? பதட்டத்தில் விநியோகஸ்தர்கள்!!

இந்திய சினிமாவில் பிரமாண்டத்துக்கு அடையாளமாக பாகுபலி படம் முன்நிறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 60 சதவீத தியேட்டர்களில் பாகுபலி - 2 திரையிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

Posted by:
Subscribe to Oneindia Tamil

இந்திய சினிமாவில் பிரமாண்டத்துக்கு அடையாளமாக பாகுபலி படம் முன்நிறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 60 சதவீத தியேட்டர்களில் பாகுபலி - 2 திரையிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

பாகுபலி முதல் பாகத்தின் விஸ்வரூபா வெற்றி, இரண்டாம் பாகத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏகத்துக்கும் உண்டாக்கியிருக்கிறது. பாகுபலி முதல் பாகம் 2015ல் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ரிலீசானது முதல் வாரம் சுமாரன வசூல், இரண்டாவது வாரம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். பாகுபலி தமிழ் மொழி உரிமையை 16.50 கோடிக்கு ஞானவேல்ராஜா வாங்கினார். தமிழ்நாடு தியேட்டர் உரிமை மட்டும் தேணான்டாள் பிலிம்ஸ் 11.50 கோடிக்கு வாங்கி விநியோகஸ்தர்களுக்கு வியாபாரம் செய்தது.

Will Bahubali 2 collects Rs 85 cr in the first week?

தமிழ்நாட்டில் மட்டும் செலவு போக சுமார் 35 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது பாகுபலி. இன்றைக்கு தியேட்டர்களுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருகிறது. 35 கோடி வசூலான படத்தை தமிழ்நாடு தியேட்டர் உரிமையை 47 கோடிக்கு வாங்கியுள்ளது கிரீன் புரொடக் ஷன்ஸ் நிறுவனம். சுமார் 55 கோடி வரை அவுட்ரேட், விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ள பாகு பலி - 2 அசலுக்காவது வசூல் செய்யுமா என்பதே விநியோகஸ்தர்கள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வரும் பொருளாக உள்ளது.

சாதாரண டிக்கட் கட்டணத்தில் தமிழ்நாட்டில் அதிக பார்வையாளர்கள் பார்த்த தமிழ் படங்கள் துப்பாக்கி, காஞ்சனா, தெறிதான்.

இம் மூன்று படங்களில் அதிக வசூலான படம் தெறி. சுமார் 40 கோடி வரை வருவாயை ஈட்டியது. நேரடி தமிழ் படம் வரி விலக்கு பெற்ற படம்., அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் நடிகர் விஜய் படமே தமிழ் நாட்டில் 40 (ரஜினிகாந்த் விதிவிலக்கு) கோடியை தாண்டாத நிலையில், பாகுபலி விலை ரூ 47 கோடி, விநியோகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 55 கோடி + செலவுகள் 5 கோடி = 60 கோடி என்று போய் நிற்கிறது.

இந்த விலைக்கு முதல் வாரம் ரூ 84 கோடி மொத்த வசூல் ஆக வேண்டும். தமிழ்நாட்டில் சராசரி 100 ரூபாய் டிக்கட் விலையில் 8.5 லட்சம் பேர் படம் பார்த்தால் மட்டுமே ரூ 85 கோடி ரூபாய் வசூலாகும். இந்த சாதனையை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்களே நிகழ்த்தாத போது பாகு பலி எப்படி சாதிக்கும் என்பதை நினைத்து படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் பதட்டத்தில் உள்ளனர்.

-ராமானுஜம்

English summary
Will Bahubali 2 collect Rs 85 cr in the first week of its release? Here is an analysis.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos