»   »  சமந்தா திருமணத்தில் ஒரே டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்டா இருக்கே?

சமந்தா திருமணத்தில் ஒரே டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்டா இருக்கே?

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என நடிகை சமந்தாவின் காதலரும், நடிகருமான நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மூத்த மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் நிச்சயதார்த்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

நாகர்ஜுனாவோ தனது இளைய மகன் அகிலின் நிச்சயதார்த்த தேதியை மட்டுமே அறிவித்துள்ளார்.

சமந்தா

சமந்தாவை நாக சைதன்யா வீட்டில் உள்ள யாருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நாகர்ஜுனா இளை மகனின் நிச்சயதார்த்த தேதியை மட்டும் அறிவித்துள்ளது டோலிவுட்காரர்களை அதிர்ச்சி அடை வைத்துள்ளது.

நாக சைதன்யா

சமந்தா, நாக சைதன்யா திருமணம் எப்பொழுது நடக்குமோ என்று நினைத்த நிலையில் மாப்பிள்ளையே அது பற்றி பேசியுள்ளார். அடுத்த ஆண்டு எனக்கு திருமணம் நடக்கும். தேதியை முடிவு செய்த பிறகு என் தந்தை அறிவிப்பார் என்று சைதன்யா தெரிவித்துள்ளார்.

காதல்

சமந்தாவை தானே காதலிக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார் நாக சைதன்யா. சமந்தாவும் தனது காதலரின் பெயரை தெரிவிக்காமலேயே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப் படங்கள்

நாக சைதன்யா சாஹஸம் ஸ்வாசக சாகிப்போ என்ற த்ரில்லர் படத்தில் பிசியாக உள்ளார். மேலும் பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

English summary
Actor Naga Chaitanya, son of Telugu superstar Akkineni Nagarjuna, has confirmed that he will tie the knot next year.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos