'என்னை அறிந்தால் 2': கௌதமுக்கு சம்மதம் தெரிவிப்பாரா அஜீத்?
சென்னை: என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா அஜீத்?
இயக்குனர் கௌதம் மேனன் அஜீத் குமார் முதல் முதலாக சேர்ந்து பணியாற்றிய என்னை அறிந்தால் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. நிச்சயம் ரூ.100 கோடி வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.
தான் ஓபனிங் கிங் என்பதை அஜீத் மீண்டும் நிரூபித்துள்ளார்.

கௌதம் ராசி
அஜீத் ஓபனிங் கிங் என்றால் கௌதம் மேனனின் ராசி படம் துவக்கத்தில் டல்லடித்தாலும் பின்னர் பிக்கப்பாகி வசூலித்துவிடும். இந்த இரண்டு பேரின் ராசியும் என்னை அறிந்தாலுக்கு கை கொடுத்துள்ளது.

இரண்டாம் பாகம்
கௌதம் மேனன் என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டார். அந்த திரைக்கதையை அவர் அஜீத்திடமும் கொடுத்துவிட்டாராம்.

தந்தை, மகள்
இரண்டாம் பாகத்தில் போலீசுக்கு வேலை இல்லையாம். முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் அவரின் 14 முதல் 15 வயது வரை உள்ள மகளைச் சுற்றியே கதை செல்லும் என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அஜீத்
என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜீத் சம்மதிப்பாரா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

சிறுத்தை சிவா
என்னை அறிந்தால் படத்தை அடுத்து சிறுத்தை சிவா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











