»   »  ஹாலிவுட் ஸ்டார்களை "பேக்"கி்ல் தள்ளி "ஃபிரண்ட்"டுக்கு வந்த பாலிவுட் ஸ்டார்கள்.. சம்பளத்தில்!

ஹாலிவுட் ஸ்டார்களை "பேக்"கி்ல் தள்ளி "ஃபிரண்ட்"டுக்கு வந்த பாலிவுட் ஸ்டார்கள்.. சம்பளத்தில்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டது, உலகளவில் 35 நடிகர்கள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் இந்திய நடிகர்களும் இடம்பெற்றிருக்கின்றனர்.

அதிலும் மற்ற ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்குத் தள்ளி முதல் 10 இடங்களுக்குள் 3 இந்தி நடிகர்கள் இடம்பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இந்த 35 நடிகர்களின் பட்டியலில் 5 இந்திய நடிகர்கள் இடம்பெற்று இருக்கின்றனர்.

இதுவரை ஹாலிவுட் நடிகர்களை மட்டும் பட்டியலிட்டு வந்த போர்ப்ஸ் முதல்முறையாக ஹாலிவுட் அல்லாத ஆங்கிலப் படவுலகினரையும் பட்டியலிட்டுள்ளது.

அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்சய் குமார், ஷாரூக்கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகிய 5 இந்தியர்கள் இடம்பிடித்திருக்கும் இந்தப் பட்டியலில் இருந்து சில சுவாரசியங்களை இங்கு காணலாம்.

அயன்மேனுக்கு முதலிடம்

சொத்து விஷயத்தில் அயன்மேன் படத்தில் நடித்த ராபர்ட் டவ்னி முதலிடத்தில் இருக்கிறார் தொடர்ந்து 3 வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கும் ராபர்ட் டவ்னி, கடந்த ஆண்டு படங்களில் நடிப்பதற்காக பெற்ற சம்பளம் சுமார் 80 மில்லியன் டாலர்கள்.

ஜாக்கிக்கு 2 வது இடம்

சீனாவின் அதிரடி நாயகனான ஜாக்கிசான் இந்தப் பட்டியலில் 2 வது இடம் பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டுகளில் அவர் படங்களில் நடித்து சம்பாதித்த தொகை சுமார் 50 மில்லியன் டாலர்கள்.

 

 

7 வது இடம் பிடித்த பிக் "பி"

போர்ப்ஸ் பட்டியலில் 7 வது நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த ஆண்டில் அவர் நடித்து சம்பாதித்த தொகை சுமார் 33.5 மில்லியன் டாலர்கள்.

 

 

சீனியருடன் போட்டியிடும் சல்மான் கான்

போர்ப்ஸ் பட்டியலில் 7 ம் இடத்தை நடிகர் அமிதாப் பச்சனுடன் பகிர்ந்து கொள்கிறார் சல்மான் கான், என்னதான் கோர்ட் கேஸ் என்று திரிந்தாலும் மனிதரின் மார்க்கெட் சற்றும் இறங்கவே இல்லை என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறது போர்ப்ஸ். எங்களுக்கும் ஆச்சரியமாத் தான் இருக்கு.

அக்சய் குமார்

1 மில்லியன் டாலர் குறைவாக சம்பாதித்து 9 வது இடத்தைப் பிடித்து இருக்கிறார் நடிகர் அக்சய் குமார். சென்ற ஆண்டில் அக்சய் குமார் சம்பாதித்த தொகை 32.5 மில்லியன் டாலர்கள்.

ஷாரூக்கான்

இந்தப் பட்டியலில் ஷாரூக்கான் 18 வது இடத்தை பிடித்திருக்கிறார், சென்ற ஆண்டு அவர் சம்பாத்திருக்கும் தொகை 26 மில்லியன்கள்.

 

 

ரன்பீர் கபூர்

இந்தியில் பல சீனியர் நடிகர்களை பின்தள்ளி இந்தப் பட்டியலில் 30 வது இடம் பிடித்திருக்கிறார் பாலிவுட்டின் இளம் நடிகர் ரன்பீர் கபூர், சென்ற ஆண்டு அவர் சம்பாதித்த தொகை சுமார் 15 மில்லியன் டாலர்கள்.

English summary
The Worlds Highest Paid Actors List 2015: Three Bollywood actors Amitabh Bachchan,Salman Khan and Akshay Kumar ranked in the top 10.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos