twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோதி விளையாடு- விமர்சனம்

    By Staff
    |

    Modhi Vilayadu
    நடிப்பு: வினய், காஜல் அகர்வால்,
    இசை: கலேனியல் கஸின்ஸ்
    பாடல்கள்: வைரமுத்து
    இயக்கம்: சரண்

    நம்ப முடியவில்லை... நல்ல இயக்குநர் என்று பெயர் வாங்கிய சரணிடமிருந்து இப்படியொரு மோசமான படமா, என்று!

    காட்சிக்குக் காட்சி டெக்னிக்கல் சமாச்சாரங்களில் சற்றே புத்திசாலித்தனமும், ஏகப்பட்ட பணக்காரத்தனமும் தெரிந்தாலும் வினயின் மோசமான நடிப்பு, எந்த வித இலக்கும் லாஜிக்கும் இல்லாத திரைக்கதை ஆகியவை பயங்கரமாகக் கடுப்படிக்கின்றன.

    ராஜன் வாசுதேவ் (கலாபவன் மணி) ஒரு பெரிய... மோசமான பணக்காரர். உலகம் முழுக்க அவருக்கு தொழில்கள். அவரது ஒரே மகன் உதய் (வினய்). தனது அல்லக்கைகளுடன் குடி, கலாட்டா என ஊரைச் சுற்றுவது அவர் வேலை. அவருக்கும் எல்ஆர் ஈஸ்வரி (காஜல் அகர்வால்) எனும் அழகிய பெண்ணுக்கும் மோதல் ஏற்பட்டு பின்னர் காதலாக முடிகிறது.

    உதய்யின் நண்பனாக கூடவே இருப்பவர் மதன் (யுவன்). ஒரு கட்டத்தில் ராஜன் வாசுதேவுக்கு எதிராக நடக்கும் ஒரு கொலைச் சதியில் மதன் கொல்லப்படுகிறார். அதில் மனமுடைந்து போகிறார் ராஜன். அதன்பிறகுதான் தெரிகிறது கொல்லப்பட்ட மதன்தான் ராஜனின் வாரிசென்று. அடுத்த நாளே நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறார், இத்தனை நாளும் ராஜனின் வாரிசு என நம்பப்பட்டு வந்த உதய்.

    அதன்பிறகு விஎம்சி அனிபாவின் துணையுடன் வினய் எப்படி தனது பழைய ஸ்டேட்டஸுக்கு வருகிறார் என்பது கொடுமையான மீதிக் கதை.

    வினய்யின் முந்தைய இரு படங்களையும் பார்த்து 'பரவாயில்லையே, நல்ல ஹீரோ கிடைச்சுட்டார்' என ரசிகர்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் அதையெல்லாம் காற்றுப் போன பலூன் மாதிரி ஆக்கிவிட்டார் வினய் இந்தப் படத்தில். நடிப்பும் சுமார்... அவர் குரலோ அதைவிட மகா சுமார்!

    காஜல் அகர்வால் அழகாக வருகிறார். முதல் பாதியில் அவர் வேலைக்காரியாக வந்து காதலில் விழும் காட்சிகள் சுவாரஸ்யம்.

    கலாபவன் மணிக்கு இந்த வேடம் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை. அதைவிட அவரை இயல்பான காமெடி கலந்த வில்லனாகவோ, நல்ல குணச்சித்திர வேடத்துக்கோ பயன்படுத்தியிருக்கலாம்.

    ஸ்பெஷல் எபெக்ட்ஸ் எனும் பெயரில் காட்சிக்குக் காட்சி 'கொல்றாங்க!'

    பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை கலோனியல் கஸின்ஸின் இசை. படம் முழுக்க பிரதான பாத்திரம் புல்ஷிட் புல்ஷிட் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

    படம் பார்த்துவிட்டு வெளியில் வருபவர்களும் அதையே திருப்பிச் சொல்கிறார்கள்.

    நியூட்டன் விதி என்னமாய் பொருந்துகிறது பாருங்கள்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X