twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோமாலியா.. ஒரு கப்பல் கேப்டனை காப்பாற்ற நடந்த போராட்டம்!

    By Chakra
    |

    சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்ட அமெரிக்க சரக்குக் கப்பலின் கேப்டனின் உண்மைக் கதை தான் இப்போது வெளியாகியுள்ள ஹாலிவுட் படமான கேப்டன் பிலிப்ஸ்.

    2009ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.

    கென்யா செல்லும் வழியில்:

    கென்யா செல்லும் வழியில்:

    ஓமன் நாட்டில் இருந்து எம்.வி.மேர்ஸ் அலபாமா என்ற சரக்குக் கப்பலை கென்யாவின் மொம்பாஸா நகருக்கு இயக்குகிறார் கேப்டன் ரிச்சர்ட் பிலிப்ஸ் (டாம் ஹேங்ஸ்).

    ஏடன் வளைகுடா வழியாக கப்பல் செல்லும்போது அதை இரு படகுகளில் வரும் சோமாலிய கடல் கொள்ளையர்கள் கைப்பற்ற முயல்கின்றனர். முதல் அட்டெம்ட்டில் தப்பிவிடுகிறது கப்பல்.

    கப்பல் ஊழியர்களிடம் மாட்டும் கொள்ளையர் தலைவன்:

    கப்பல் ஊழியர்களிடம் மாட்டும் கொள்ளையர் தலைவன்:

    ஆனால், இரண்டாவது முறையாக வரும் கொள்ளையர்கள் கப்பலை கைப்பற்றி மில்லியன் டாலர் பணயத் தொகை கேட்கின்றனர். கேப்டனையும் 4 பேரையும் சிறை பிடிக்கும் கொள்ளையர்கள் என்ஜின் ரூமில் மறைந்துவிட்ட பிற கப்பல் ஊழியர்களைப் பிடிக்கச் செல்கின்றனர். இதில் கொள்ளையர் தலைவனை கப்பல் ஊழியர்களே சிறை பிடித்துவிடுகின்றனர்.

    கேப்டனை லைப் போட்டில் கடத்திக் கொண்டு:

    கேப்டனை லைப் போட்டில் கடத்திக் கொண்டு:

    கேப்டனை விட்டால் கொள்ளையர் தலைவனை விடுவிப்போம் என்ற பேச்சுவார்த்தை லைப் போட்டில் வைத்து நடக்கிறது. பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே லைப் போட்டில் கேப்டனைக் கடத்தியபடி தப்பிச் செல்கின்றனர் கொள்ளையர்கள்..

    இதன் பின்னர் நடப்பது தான் கதையே...

    இதன் பின்னர் நடப்பது தான் கதையே...

    தனது நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலின் கேப்டனை கொள்ளையர்கள் கடத்திவிட்டனர் என்றவுடன் அமெரிக்காவின் ஒட்டு மொத்த கடற்படையும் நேவி சீல்களும் (ஒசாமா பின் லேடனை காலி செய்த சிறப்புப் படை) களத்தில் குதிக்கிறது.

    முதலில் லைப் போட்டை அமெரிக்க கடற்படையின் USS Bainbridge போர்க் கப்பல் நெருங்கி கேப்டனை விடுவிக்க முயல்கிறது. ஆனால், அந்த லைப் போட் முழுவதும் மூடப்பட்ட ஒரு படகு என்பதால் கொள்ளையர்களை அவர்களால் எளிதாக போட்டுத் தள்ள முடியாத நிலை.

    மேலும் 2 போர்க் கப்பல்கள்:

    மேலும் 2 போர்க் கப்பல்கள்:

    இதையடுத்து இன்னொரு போர்க் கப்பலான USS Halyburton அந்தப் பகுதிக்கு விரைகிறது. தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் கொண்ட பெரிய போர்க் கப்பலான USS Boxer கப்பலும் அங்கு வந்து சேருகிறது. மூன்று கப்பல்களும் லைப் போட்டை சுற்றி வளைத்தாலும் தங்களது தாக்குதலால் கேப்டன் உயிரிழக்கக் கூடாது என்பதால் மிக ஜாக்கிரதையாக நிலைமையைக் கையாளுகின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் சீல் படை:

    அமெரிக்காவிலிருந்து வரும் சீல் படை:

    கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடியே இவர்கள் காத்திருக்க, அமெரிக்காவின் விர்ஜீனியாவில் இருந்து நேவி சீல் கமாண்டோக்களை ஏற்றியபடி இரவில் அந்தப் பகுதிக்கு வருகிறது அமெரிக்க கடற்படை விமானம்.

    அதிரடியில் சீல் படை:

    அதிரடியில் சீல் படை:

    அதிலிருந்து பாராசூட்டில் குதிக்கும் சீல் படை கமாண்டோக்கள் USS Boxer கப்பலில் வந்திறங்குகின்றனர். முதலில் லைப் போட்டில் நடக்கும் பேச்சுக்களை ஒட்டுக் கேட்க அதன் மீது கருவிகளை பொறுத்துவிட்டு, அந்த போட் தப்பிவிடாமல் இருக்க அதை தங்கள் கப்பலோடு சேர்த்துக் கட்டுகின்றனர்.

    அவர்களும் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்து, பயனில்லாமல் போகவே, இறுதியில் சீல் படையினர் எடுக்கும் நடவடிக்கைகள் தான் மிச்ச கதை.

    பிரமிக்க வைக்கும் டாம் ஹேங்க்ஸ்:

    பிரமிக்க வைக்கும் டாம் ஹேங்க்ஸ்:

    இதில் கேப்டனாக மாறிவிட்டார் டாம் ஹேங்ஸ். அவரது கேஸ்ட் அவே படத்தை பார்த்தவர்களுக்கு அவரது நடிப்பின் உச்சம் புரியும். இதிலும் அவரது ஒவ்வொரு அசைவிலும் உண்மையான கேப்டனே தெரிகிறார். மிகச் கச்சிதமாக அந்த வேடத்தில் புகுந்து கொண்டு பிரமிக்க வைக்கிறார்.

    நம் ஊர் நிலைமை கண் முன் ஆடுகிறது:

    நம் ஊர் நிலைமை கண் முன் ஆடுகிறது:

    அடுத்து ஆச்சரியமூட்டுவது அமெரிக்க கடற்படையின் வேகமும், தீவிரமும். நம் ஊரில் தினம் ஒரு தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு பிணமாகத் திரும்பி கொண்டிருக்கும் நிலையில், ஒரு கப்பலின் கேப்டனுக்காக 3 போர்க் கப்பல்கள், போர் விமானம் மூலம் கொண்டு வரப்படும் சீல் படையினர், ஆளில்லா உளவு விமானமான ScanEagle என அமெரிக்கா தனது நாட்டினரின் உயிர்களுக்குத் தரும் மரியாதையை நினைத்தால் வாயடைத்துப் போகிறது.

    மியூசியத்தில் பைபர் கிளாஸ் படகு:

    மியூசியத்தில் பைபர் கிளாஸ் படகு:

    இந்தத் தாக்குதலில் பிடிபட்ட ஒரு கடல் கொள்ளையனான அப்துலவலி மூஸ் அமெரிக்க சிறையில் 30 ஆண்டு தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கேப்டனை கடத்திச் சென்ற அந்த பைபர் கிளாஸ் லைப் போட் இன்னும் கூட புளோரிடாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் UDT-SEAL மியூசியத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டை நேரடியாகப் பார்த்து அதே போன்ற ஒரு போட்டை உருவாக்கி படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் பால் கிரீன்கிராஸ்.

    பார்ன் அல்டிமேடம்...

    பார்ன் அல்டிமேடம்...

    பார்ன் அல்டிமேடம், அமெரிக்க இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலை மையமாக வைத்து உருவான யுனைட்டட் 93 போன்ற மறக்க முடியாத படங்களின் இயக்குனர் தான் பிரிட்டனைச் சேர்ந்த கிரீன்கிராஸ்

    English summary
    British director Paul Greengrass has the rare gift of working with action-thriller material and making something cohesive, layered and complex from it. He did so superbly in United 93 and in his two Bourne films: and with Captain Phillips, an account of Somali pirates boarding an American cargo ship and kidnapping its captain, Greengrass remains at the top of his game.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X