»   »  இந்தியாவா ? பாகிஸ்தானா?

இந்தியாவா ? பாகிஸ்தானா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடம்பாக்கத்தில் இசை அமைப்பாளர்கள் நடிகர்களாக மாற பாதை அமைத்துத் தந்த இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூன்றாவது படம் இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கோடை விடுமுறை கொண்டாட்டம்.

நான், சலீம் ஆகியமுதல் இரண்டு படங்களும் த்ரில்லர் படங்களாக இருந்ததால் மனிதர் நடிக்காமலேயே தப்பி விட்டார். இந்த படத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறார். கதையின் மேல் உள்ள நம்பிக்கையில் படத்தை தயாரித்த விஜய் ஆண்டனியின் கணிப்பு இப்படத்தில் சரியாகவே அமைந்து இருக்கிறது.


நாயகன் விஜய் ஆண்டனியும் நாயகி சுஷ்மா சுவராஜும் வழக்குக்காக அலைந்து திரியும் இளம் வக்கீல்கள். எதிர்பாராத விதமாக ஒரே பிளாட்டில் இருவருக்கும் அலுவலகம் அமைந்து விடுகிறது . அதே நேரம் திருநெல்வேலியில் இருந்து சொத்து தகராறு காரணமாக சென்னைக்கு வரும் இரண்டு பேர் இவர்கள் இருவரையும் அணுக வாதிக்கு ஒருவரும் பிரதிவாதிக்கு ஒருவரும் என நாயகனும் நாயகியும் எதிர் எதிர் தரப்பில் வாதாட முன்வருகின்றனர்.


இந்த வழக்குக்காக இருவரும் திருநெல்வேலிக்கு செல்லும் போது அங்கு நடக்கும் திருவிழாவில் இருவரும் தங்களை மறந்து காதல் வயப்படுகின்றனர். மீண்டும் ஒரு சின்ன சந்தேகம் தலை தூக்கி இருவரும் பிரிய நேர்கையில் விதிவசத்தால் ஒரு போலி என்கவுண்டர் வீடியோ ஆதாரம் இருவர் கையிலும் கிடைக்கிறது.


இதற்கிடையில் கிராமத்து நிலப் பிரச்சினை வாரிசுகள் இருவரும் காதல் வயப் பட்டு அடைக்கலம் தேடி இவர்களிடம் வர வீடியோ ஆதாரத்தைத் தேடி அந்த போலீஸ் அதிகாரி இவர்களைத் துரத்த முடிவு என்ன என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆனந்த்.


விஜய் ஆண்டனி:

வழக்கமாக 'உர்' முகத்துடன் வரும் விஜய் ஆண்டனி தனக்கு காமெடியும் வரும் என்பதை நிருபிக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். நடனத்திலும் முன்னேற்றம் தெரிகிறது.வக்கீலாக வாதாடுவதை விட சுஷ்மாவிடம் இவர் வழக்காடுவது தான் மனதில் பதிகிறது.


சுஷ்மா:

அறிமுக நாயகி என்றாலும் கொடுத்த வேடத்தை கச்சித மாக செய்து இருக்கிறார். நடனமும் ஓரளவு வருகிறது அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து நடிப்பதில் இருக்கிறது இவரின் எதிர்காலம்.


என்.ஆனந்த்:

இயக்குனர் ஆனந்த் புதியவர் என்றாலும் எடுத்துக் கொண்ட முதல் படத்தையே வெற்றிப் படமாக கொடுத்து ஆரம்பமே அமர்க்களமாக தொடக்கி இருக்கிறார். பசுபதி


மனோபாலா,ஜெகன்,டி.பி,கஜேந்திரன் ,ஊர்வசி என ஒரு நட்சத்திரப் பட்டளாத்தையே வைத்து காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். இனி அடுத்தடுத்து


 


காமெடி படம் தானா?

தீனா தேவராஜின் இசையில் பாடல்கள் ஒரு சில மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ரகம். பின்னணி இசையிலும் தன் இசைத் திறமையை காட்டி அசத்தி இருக்கிறார்.


மொத்தத்தில் இந்தியா- பாகிஸ்தான் கோடைக்கு ஏற்ற விருந்து..


 


English summary
India Pakistan Movie has comes as a feast to the fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos