twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீச்சாங்கை – கை கொடுக்கும் கை!

    By Shankar
    |

    சில வருஷங்களுக்கு முன்னால கிரிக்கெட் விளையாண்டுகிட்டு இருந்த ஒருத்தர் கேட்ச் புடிக்கிறேன்னு கீழ விழுந்ததால மெடுல்லா ஆப்ளங்கேட்டால அடிபட்டு, பழசையெல்லாம் மறந்து சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டு இருந்தாரு. ரொம்ப புதுமையான விஷயமா இருந்ததாலும், நகைச்சுவை கலந்து சொன்னதாலயும் எல்லாரையுமே ரொம்ப கவர்ந்த படமா மாறுச்சி. அடுத்ததா போன வருஷம் Tunnel vision அப்டிங்குற இன்னொரு புதுமையான வியாதிய அறிமுகப்படுத்தி, விதார்த்தால கூட இப்டியெல்லாம் நடிக்க முடியுமானு காண்பித்த, ரொம்ப சீரியஸான கதைக்களத்துல உருவான படம் குற்றமே தண்டனை.

    அந்த வரிசையில அடுத்ததா Alien Hand Syndrome (வலது மூளை சொல்வது இடது மூளை கேட்காது) அப்டிங்குற ஒரு புதுமையான குறைபாட்டப் பத்தி எங்கயோ படிச்ச இயக்குனர் அத மையமா வச்சி ஒரு கதைய ரெடி பண்ணி படமா குடுத்துருக்காரு. முதல்ல படத்தோட விளம்பரங்கள்ல 'Alien Hand Syndrome' பற்றிய இந்தியாவின் முதல் படம்னு விளம்பரம் பண்ணியிருந்தாங்க. ஒருவேளை படத்துக்காக இவங்களா ஒரு வியாதிய உருவாக்கிருப்பாங்களோன்னு நினைச்சா, அப்டியெல்லாம் இல்லை. உண்மையிலயே அப்படி ஒரு குறைபாடு இருக்கு.

    Peechankai - Readers review

    S.முத்து என்கிற ஸ்மூது பிக்பாக்கெட் கில்லாடி. அவர் மட்டும் இல்லாம அவரோட நண்பர், நண்பரோட மனைவின்னு குடும்பமா சேர்ந்து டீம் ஒர்க் பண்ணி பிக்பாக்கெட் அடிக்கிறவங்க. அதுவும் அந்த குரூப்புல ஸ்மூது ஒரு நல்ல மனம் படைத்த பிக்பாக்கெட். திருடுனதுல முக்கியமான பொருட்கள் எதாவது இருந்தா எடுத்தவங்களுக்கே கொரியர் அனுப்பி விடுற அளவுக்கு நல்லவர்.

    எதிர்பாராத ஒரு விபத்துல, அவருக்கு Alien Hand Syndrome அப்டிங்குற குறைபாடு வந்துட அவரோட இடது கை அவர் சொல்ற பேச்சை கேக்காம அதுவா தனியா செயல்படுது. எவ்வளவோ முயற்சி செஞ்சும் அவரோட பீச்சாங்கைய அவரால கண்ட்ரோல பண்ண முடியல. அந்த சமயம் பாத்து ஒரு மிகப் பெரிய பிக்பாக்கெட் ஆர்டர் ஸ்மூதுக்கு கிடைக்க, சொல் பேச்சு கேக்காத கைய வச்சிக்கிட்டே அத எப்படி செஞ்சி முடிக்கிறாரு, அத செஞ்சதால என்னென்ன விளைவுகள்லாம் வருதுங்குறதுதான் படம்.

    படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ் ஹீரோ. ஆளு சூப்பரா இருக்காரு. நல்ல ஸ்கிரீன் ப்ரசன்ஸ். சிரிக்கும்போதெல்லாம் நம்ம விமல் மாதிரி இருக்காரு. 'இவன் ரூபத்துல ஒருத்தன ஊமையா பாக்குறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு'ன்னு பார்த்திபனைப் பாத்து வடிவேலு சொல்ற மாதிரி விமல் ரூபத்துல ஒருத்தன் நல்லா நடிக்கிறதப் பாக்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. Mark my words. பெரிய ஆளா வருவாரு.

    அதுவும் அந்த Alien Hand Syndrome வந்தப்புறம் ஒரு பத்து நிமிஷம் அந்தக் கைய வச்சிக்கிட்டு அவர் படுற பாடும், அந்தக் கை பண்ணுற அட்டகாசங்களும் செமை. ஆனா தொடர்ந்து அதயே பாக்க கொஞ்சம் போர் அடிக்கத்தான் செய்யிது. ரெண்டாவது பாதில கை சொல் பேச்சு கேக்காம இவரு அதுகூட மல்லுக்கட்டும் போதெல்லாம் 'போதும்ப்பா'ன்னு ஆயிருச்சி.

    Peechankai - Readers review

    புருஷன், பொண்டாட்டி, நண்பன்னு மூணு பேரும் சேர்ந்து பிக்பாக்கெட் அடிக்கிற ஒரு வித்யாசமான காம்பினேஷனோடவும், ஜாலியான, சூப்பரான ஒரு முதல் பாடலோட ஆரம்பிக்கிது படம்.

    ஆனா முதல் பதினைஞ்சி இருபது நிமிஷத்துல கிடைக்கிற அந்த ஜாலி ஃபீல் போகப் போக கம்மியாக ஆரம்பிக்கிது. அதை கெடுக்கிறது யாருன்னா நாலு பேர் கொண்ட வில்லன் குரூப்பு.. ப்ளாக் காமெடிங்குற பேர்ல கழுத்துல கத்தி போடுறாங்க.

    பக்கத்துல இருந்தவரு என்ன தம்பி ஒரு மாதிரி கவ்வுதுன்னாரு...ப்ளாக் காமெடின்னா அப்டித்தான்னே இருக்கும்ன்ணேன். அதுக்கில்ல தம்பி ப்ளாக்கோ ஒயிட்டோ காமெடின்னா சிரிப்பு வரணுமேன்னாரு... "சாரி சார்.. உங்களுக்கு அப்டின்னா ப்ளாக் காமெடி புரியல.. திஸ் ஈஸ் உலக சினிமா பாக்குறவங்களுக்குதான் புரியும்,"ன்னேன். மேலருந்து கீழ வரைக்கும் பாத்துட்டு எழுந்து போய் நாலு சீட் தள்ளி உக்கார்ந்துட்டாரு.

    மனைவிக்கு பயப்படுற வில்லன். அத சொல்லியே மிரட்டுற ஆர்வக்கோளாறு மச்சான். நகரவே கஷ்டப்படுற அதிக எடையுள்ள ஒருத்தர். சீரியஸான ஒருத்தர்ன்னு அந்த வில்லன் குரூப் செட்டப்பெல்லாம் நல்லாதான் இருந்துச்சி. ஆனா அந்த மச்சான் கேரக்டர்தான் கடுப்பு.

    காட்சிகள் எடுக்கப்படுற லொக்கேஷன் ரொம்ப முக்கியம். ஒரே லொக்கேஷன், ஒரே லைட்டிங் போன்றவற்ற முடிஞ்ச அளவு தவிர்த்தா நல்லது. ஏன்னா இப்பல்லாம் பெரிய ஹீரோ படங்கள்லயே ஒரே லொக்கேஷன் ரெண்டு மூணு தடவ வந்தா கடுப்பாகுறாங்க நம்மாளுக.

    இங்க வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொத்தமுமே ஒரு குடோனுக்குள்ள எடுத்துருக்காங்க. அதே லைட்டிங்க். ஒரே மாதிரியான வசன உச்சரிப்பு. முதல் பட இயக்குநர்கள் பெரும்பாலனவங்களுக்கு இருக்க பிரச்சனை இது. பட்ஜெட்டுக்குள்ள முடிக்கனும்னு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள படத்த அடக்கிடுறாங்க.

    Peechankai - Readers review

    ப்ளேடு போட்டு பிக்பாக்கெட் அடிக்கிறது கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன ஒரு தொழிலாயிருச்சி. அதே மாதிரிதான் STD பூத்தும். இப்பல்லாம் STD பூத்துக்கு யாரும் போய் ஃபோன் பண்றாங்களாங்குறதே டவுட்டுதான். இந்த மாதிரி காட்சிகள் தற்போதைய சூழலுக்கு பொருந்தாம இருக்கிறதால கொஞ்சம் நெருடலா இருக்கு.

    காமெடி படங்கள்னாலும் சில விஷயங்கள சீரியஸாத்தான் காமிக்கனும். ஆரம்பத்தில 'குஜக' கட்சின்னு சொல்லிட்டு 'நல்லவங்களோட்தான் கூட்டணி'ன்னு விஜயகாந்த் பேட்டிய கிண்டலடிக்கிறாங்க. ஒருவேளை இது ஸ்பூஃப் வகைப் படமோன்னு பாத்தா அதெல்லாம் இல்ல. திரும்ப இடையில TRP TV ன்னு ஒரு சேனல்ல நியூஸ் வாசிக்கிறத காமிக்கிறாங்க. அந்த நியூஸ் வாசிக்கிற பொண்ணு என்னன்னா கிரிஜா ஸ்ரீ மாதிரி பேசிக்கிட்டு இருக்கு. கதைக் களத்துக்கு ஏத்த மாதிரிதான் காமெடி வைக்கனுமே தவிற சும்மா எதை வைச்சாலும் மக்கள் சிரிக்க மாட்டங்க.

    ஹீரோயின் சுமார் ரகம். ஆனா கதையில ஹீரோயினுக்கு ரொம்ப முக்கியத்துவம் இல்லைங்குறதால ஒண்ணும் பெருசா தெரியல. பாடல்கள் வித்யாசமா இருக்கு. பிண்ணனி இசையும் ஓக்கே.

    இயக்குநர் அஷோக்கு முதல் படம். ரொம்பவே வித்யாசமான கான்செப்ட். கதை திரைக்கதை ரெண்டுமே நல்லாதான் பண்ணிருக்காரு. மேக்கிங்கும் நல்லாதான் இருக்கு. சில இடங்கள்ல short film பாத்துகிட்டு இருக்க மாதிரி இருக்கு. இதே செட்டப்ப வச்சி இன்னும் சிறப்பா செஞ்சிருக்கலாம்.

    எப்டியோ, ட்ரெயிலரப் பாத்து எதிர்பார்த்த அளவு படம் ரொம்ப சிறப்புன்னு சொல்ல முடியாது. ஆனா கண்டிப்பா ஒருதடவ பாக்கலாம்!

    - முத்து சிவா

    English summary
    Muthu Siva's comments on Peechankai movie directed by debutant Ashok
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X