twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    றெக்க விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    2.0/5
    Star Cast: விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், ஹரீஷ் உத்தமன்
    Director: ரத்னசிவா
    -எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், ஹரீஷ் உத்தமன், சிஜா ரோஸ், கேஎஸ் ரவிக்குமார்

    ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்

    இசை: டி இமான்

    தயாரிப்பு: பி கணேஷ்

    இயக்கம்: ரத்னசிவா

    கதைக்குப் பாந்தமான நாயகன் என்று பெயரெடுத்த விஜய் சேதுபதிக்கு ஆக்ஷன் நாயகன் ஆசை வந்துவிட்டது. அதுவும் எப்படி... நான்கைந்து பேரை அடிக்கும் அளவுக்கு அல்ல... ஒற்றையாளாய் மொத்த மதுரை அடியாட்களையும் அடிக்கும் அளவுக்கு. ம்ம்... 'அபார வளர்ச்சி'தான்!

    Rekka Review

    றெக்க படத்துக்குள் ரெண்டு மூணு கதைகள். அவற்றை இணைப்பதில் ஏகப்பட்ட குழப்படிகள்.

    கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதியில் யார் காதலித்தாலும், பிரச்சினை என்று வந்தால் உடனே பெண்ணைத் தூக்கிவந்து காதலனுடன் சேர்த்துவைக்கும் லோக்கல் நல்ல தாதா விஜய் சேதுபதி. இதற்கு அப்பா அம்மாவின் அமோக ஆதரவும் உண்டு.

    இந்த பொண்ணு தூக்கும் விவகாரத்தில், ஏற்கெனவே ஹரீஷ் உத்தமனுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு பழைய பஞ்சாயத்து. அதே மாதிரி ஹரீஷுக்கும் கபீர் சிங்குக்கும் இன்னொரு பஞ்சாயத்து. இந்த நேரம் பார்த்து விஜய் சேதுபதியின் தங்கை கல்யாணம் நடக்கிறது.

    Rekka Review

    ஊரிலிருக்கிற பெண்களையெல்லாம் தூக்கிப் போய் கல்யாணம் பண்ணி வைத்த விஜய் சேதுபதியின் தங்கையைத் தூக்கினால் எப்படி இருக்கும் என ஹரீஷ் யோசிக்க, 'வேணாம்பா... நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்...' என்று விசே இறங்கிவர, 'சரி, நீ போய் மதுரையில் கபீர் சிங்குக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள மினிஸ்டர் வீட்டுப் பெண் லட்சுமி மேனனை தூக்கி வா... உன் தங்கையை விட்டுடறேன்' என ஹரீஷ் உத்தரவிட, தங்கை கல்யாணத்தை விட்டுவிட்டு மதுரை பறக்கிறார் விசே.

    அங்கு போய் லட்சுமி மேனனைத் தூக்குகிறாரா? மினிஸ்டர், வில்லன்கள், அடியாட்களை எப்படிச் சமாளிக்கிறார் என்பதெல்லாம் தனி கதை.

    Rekka Review

    இந்தக் கதைக்குள் விஜய் சேதுபதி ஏன் இப்படி 'பொண்ணு தூக்குகிறார்' என்பதற்கு ஒரு ப்ளாஷ்பேக்... அதில் மாலாக்கா காதல்... என்று தனி எபிசோட்.. ஆனால் சுத்தமாக ஒட்டவில்லை.

    இந்தக் கதையை எப்படிக் கேட்டு ஓகே பண்ணார் விஜய் சேதுபதி என்று புரியவில்லை. ரத்ன சிவா சொன்ன ஆக்ஷன் ப்ளாக்கை மட்டும் கேட்டுவிட்டு திருப்தி அடைந்துவிட்டார் போலிருக்கிறது.

    விஜய் சேதுபதிக்கு ஆக்ஷன் நன்றாகவே வருகிறது. ஆனால் அதை நம்பும்படியான காட்சிகளுக்குப் பயன்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்த ஆக்ஷன் காட்சிகளைவிட, மாலாக்காவை லிப்டில் பார்த்ததும் ஒரு 'ஆக்ஷன்' காட்டுகிறாரே... அது பென்டாஸ்டிக். அதுதான் உங்க பலம் விஜய் சேதுபதி. கதைகளில் கவனம் முக்கியம்.

    Rekka Review

    என்னாச்சு லட்சுமி மேனனுக்கு... வீங்கிய முகம், வழியும் மேக்கப், வயசுக்குப் பொருத்தமற்ற உடல் சைஸ்... திரும்ப 'சுந்தரபாண்டியன் லட்சுமி'யாட்டம் வாங்க பாக்கலாம்!

    மாலாக்காவாக வரும் சிஜா ரோஸ் இந்தப் படத்தின் ஸ்பெஷல். ஆளும் நடிப்பும் கொள்ளை அழகு. அவருக்காகவே இமான் போட்டிருக்கும் அந்த மெட்டும் பாட்டும் பிரமாதம். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவுக்கு ஒரு கைத் தட்டல்!

    Rekka Review

    கேஎஸ் ரவிக்குமார், வில்லன்கள் ஹரீஷ் உத்தமன், கபீர் சிங், நண்பனாக வரும் சதீஷ் எல்லோருமே சரியாகச் செய்திருந்தாலும், தெளிவில்லாத திரைக்கதை, அபத்தமான காட்சியமைப்புகள் படத்தில் ஒன்றவிடாமல் செய்கின்றன. அதுவும் அந்த மதுரை காட்சிகள்... அபத்தத்தின் உச்சம்!

    English summary
    Vijay Sethupathy's first action flick Rekka is an immature creation which fails to attract the viewers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X