twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடனமாடியபோது விழுந்து கழுத்தில் பலத்த அடி... 20 நாள் சிகிச்சைக்குப் பின் மீண்ட ராகவா லாரன்ஸ்

    By Sudha
    |

    சென்னை: நடன இயக்குநரும், இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் படப்பிடிப்பின்போது தவறி விழுந்து 20 நாள் சிகிச்சைக்குப் பின் மீண்டுள்ளார்.

    இதில் அவரது கழுத்திலும், மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரைச் சேர்த்து 20 நாட்கள் கழிந்து தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

    முனி 3 படப்பிடிப்பின்போது நடந்த டான்ஸ் ஒத்திகையின்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டு விட்டது.

    காஞ்சனாவின் தொடர்ச்சி கங்கா

    காஞ்சனாவின் தொடர்ச்சி கங்கா

    காஞ்சனாவின் தொடர்ச்சிதான் கங்கா.. அதாவது முனி பார்ட் 3. இந்தப் படத்தையும் வித்தியாசமாக எடுத்து வருகிறார் லாரன்ஸ்.

    அடிபட்டு காயம்

    அடிபட்டு காயம்

    படப்பிடிப்புத் தளத்தில் நடன ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து விட்டார் லாரன்ஸ்.

    20 நாள் சிகிச்சை

    20 நாள் சிகிச்சை

    இதில் கழுத்திலும், மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். இருபது நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் லாரன்ஸ்.

    பிஸியோதெரபி தருகிறார்கள்

    பிஸியோதெரபி தருகிறார்கள்

    தற்போது அவருக்கு வீட்டிலேயே பிஸியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ரிஸ்க் ஜாஸ்தி

    ரிஸ்க் ஜாஸ்தி

    இதுகுறித்து லாரன்ஸ் கூறுகையில், படத்தின் முதல்பாதி முடிந்து விட்டது. இரண்டாம் பாதியில் ரிஸ்க்கான காட்சிகள் அதிகம் இருப்பதால் முழு சிகிச்சைக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். டாக்டர்கள் முழு ஆதரவுடனும் நான் வணங்கும் எல்லா வல்ல இறைவன் ஸ்ரீ ராகவேந்திரர் மகிமையாலும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்கிறார் லாரன்ஸ்.

    English summary
    Actor Ragava Lawrance was injured during the shoot of Muni 3and has recovered after 20 days treatment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X