twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    200 நாட்களை கடந்த பாகுபலி படப்பிடிப்பு..!

    By Mayura Akilan
    |

    எஸ்.எஸ். ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழில் இந்தப் படம் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாக உள்ளது

    இப்படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களை கடந்து நடந்து வருகிறது. இரண்டு பகுதியாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் பகுதி ஏப்ரல்-2015ல் கோடை விடுமுறையாக வெளியாகவுள்ளது.

    இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு சராசரியாக 100 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடப்பது வழக்கம். சில இந்திப் படங்கள்தான் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருக்கும். ஆனால், தமிழ், தெலுங்கைப் பொறுத்தவரை ஒரு படத்தை ஏறக்குறைய ஒரு வருடத்திற்குள் எடுத்து முடித்து வெளியிட்டு விடுவார்கள்.

    ஒரு ஆண்டுக்கு முன்

    ஒரு ஆண்டுக்கு முன்

    'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜுலை மாதம் தொடங்கியது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    சரித்திர கால திரைப்படம்

    சரித்திர கால திரைப்படம்

    சரித்திரக் காலப் படம் என்பதால் பிரம்மாண்டமான அரங்க அமைப்பு, ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் என இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத அளவில் படம் தயாராகி வருகிறது.

    2015ஆம் ஆண்டு ரிலீஸ்

    2015ஆம் ஆண்டு ரிலீஸ்

    2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் எடிட்டிங், மற்ற கிராபிக்ஸ் வேலைகள் அனைத்துமே படப்பிடிப்பு நடைபெற்று முடிந்ததுமே உடனுக்குடன் நடந்து வருகிறது.

    படத்தை வாங்க போட்டி

    படத்தை வாங்க போட்டி

    இப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே படத்திற்கான வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இது வரை மூன்று ஏரியாக்களை விற்று சுமார் 47 கோடிக்கு இப்போதே வியாபாரம் செய்துவிட்டார்கள். அது மட்டுமல்ல மற்ற ஏரியாக்களுக்கும் இப்போதே பலரும் போட்டி போடுகிறார்களாம். இன்னும் ஆறு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.
    அவ்வப்போது படத்தைப் பற்றிய 'மேக்கிங்' வீடியோவையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்கள்.

    ரூ.175 கோடி செலவில்

    ரூ.175 கோடி செலவில்

    இரண்டு பாகமாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் செலவு 175 கோடி வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.இந்தப் படம் வெளிவந்த பிறகு இந்திய திரையுலகத்தின் இமேஜ் உலக அளவில் அதிகமாக உயரும் என தெலுங்குத் திரைப்படத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Rajamouli’s ‘Baahubali’ has completed two hundred days on set. The film started shooting sometime in July 2013 and 200 days were spent on the set so far, making it one of the longest movies to be shot in Telugu. With an estimated budget of more than 175 Crores, ‘Baahubali’ is one of the most eagerly awaited films of 2015.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X