கோச்சடையான் படப்பிடிப்பு... திருவனந்தபுரம் வந்தார் தீபிகா!

Posted by:
 

கோச்சடையான் படப்பிடிப்பின் லண்டன் முதல் ஷெட்யூலில் தீபிகா படுகோன் பங்கேற்கவில்லை. காரணம் அவர் இந்திப் படத்தில் பிஸியாக இருந்தார்.

இப்போது இரண்டாவது ஷெட்யூல் கேரளாவில் தொடங்கியதுமே அவருக்கு அழைப்பு அனுப்பினார் சௌந்தர்யா. அப்போது அவர் மனாலியில் Yeh Jawaani Hai Deewani படப்பிடிப்பில் இருந்தார். தீபிகாவின் வேலை நான்கு தினங்கள்தான் என்பதால், இந்தி இயக்குநரிடம் அனுமதி கேட்டு திருவனந்தபுரம் வந்துவிட்டார் தீபிகா.

ரஜினியுடன் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அவுட்டோர் தொடர்புடையவை அல்ல. முழுக்க ஸ்டுடியோவில் எடுக்க வேண்டியவை என்பதால், திருவனந்தபுரம் ஸ்டுடியோவில் வைத்து சௌந்தர்யா படமாக்கி வருகிறார்.

இன்றும் நாளையும் படப்பிடிப்பு முடிந்ததும், மீண்டும் இந்திப் படத்துக்குத் திரும்பிவிடுவாராம் தீபிகா.

இருந்தாலும் அடுத்த ஷெட்யூலின்போது தீபிகாவால் வரமுடியாமல் போனால் என்ன செய்வது என்பதற்காக, கூடுதலாக சில காட்சிகளுக்கும் சேர்த்து நாளை ஷூட் செய்யப்போகிறாராம் சௌந்தர்யா. அனிமேஷன் என்பதால் ஸ்டுடியோவில் வைத்து மேட்ச் பண்ணிக் கொள்ளலாம் எனத் திட்டமாம்!

Topics: deepika, trivandrum, தீபிகா, திருவனந்தபுரம், கோச்சடையான், kochadaiyaan
English summary
Deepika Padukone, the heroine of Rajini's Kochadaiyaan is now joining with the crew for the second schedule shoot.

Tamil Photos

Go to : More Photos