»   »  ஒரே நேரத்தில் ரஜினி, விக்ரம், சூர்யா ஷூட்டிங்... அடுத்த கோடம்பாக்கமானது மலேசியா!

ஒரே நேரத்தில் ரஜினி, விக்ரம், சூர்யா ஷூட்டிங்... அடுத்த கோடம்பாக்கமானது மலேசியா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவுக்கு தமிழ்நாட்டில் என்ன மவுசோ வரவேற்போ அதற்கு சற்றும் குறையாத கோலாகல வரவேற்பு மலேசியா, சிங்கப்பூரிலும் கிடைக்கிறது.

படங்களுக்கே இப்படி என்றால், அவற்றின் நாயகர்களுக்கு? சந்தேகமே வேண்டாம்... தமிழ் நட்சத்திரங்கள் மலேசியா, சிங்கப்பூருக்கு வந்தால் ராஜ மரியாதைதான்.


ரஜினி

சமீபத்தில் கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்ற ரஜினிக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்து தென்கிழக்காசிய நாடுகளே வியந்தன. ரஜினி மலேசியாவில் தங்கியிருந்த நாட்கள் முழுவதுமே அவரைப் பார்க்க திருவிழா கூட்டம். தினசரி தலைப்புச் செய்திகளின் நாயகனாகத் திகழ்ந்தார் அவர்.


மீண்டும் கபாலி

சில வார இடைவெளிக்குப் பிறகு கபாலி இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் இப்போது மலேசியாவுக்குச் சென்றுள்ள ரஜினிக்கு முன்பைவிட இன்னும் உற்சாகமான வரவேற்பைத் தந்து மகிழ்ந்துள்ளனர் மலேசிய மக்கள்.


விக்ரம்

கபாலி ரஜினி வந்த உற்சாகத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக சீயான் விக்ரமின் மலேசிய வருகை அமைந்துவிட்டது. அவர் தனது இரு முகன் படத்தின் முக்கிய காட்சிகளைப் படமாக்கக மலேசியாவில் முகாமிட்டுள்ளார்.


சூர்யா

தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளையான சூர்யாவும் இப்போது மலேசியாவில்தான் முகாமிட்டுள்ளார். ஹரி இயக்கத்தில் அவர் நடிக்கும் எஸ் 3 படத்தின் பெரும்பகுதி காட்சிகள் மலேசியாவில்தான் படமாகின்றன.


கொண்டாட்டம்

இப்படி தமிழ் சினிமாவின் மூன்று டாப் நட்சத்திரங்கள் அவர்களின் மிக முக்கியமான படங்களுக்காக மலேசியாவில் முகாமிட்டிருப்பது மலேசிய ரசிகர்களை கொண்டாட்ட மனநிலையில் வைத்துள்ளது.


பாதுகாப்பு

இந்த மூன்று நட்சத்திரங்களுக்குமே உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது மலேசிய அரசு.


English summary
Tamil cinema’s three leading heroes- Rajinikanth, Vikram and Suriya camping in Malaysia for their crucial projects.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos