»   »  சபாஷ் நாயுடு ஓவர்... அடுத்து ஆக்‌ஷன் படத்துக்கு தயாராகும் கமல்!

சபாஷ் நாயுடு ஓவர்... அடுத்து ஆக்‌ஷன் படத்துக்கு தயாராகும் கமல்!

Subscribe to Oneindia Tamil

நேற்றுதான் தொடங்கியது போல் இருக்கிறது சபாஷ் நாயுடு ஷூட்டிங். லாஸ் ஏஞ்சல்ஸ் போன டீம் அதற்குள் ஷூட்டிங் ஓவர் என்று ஃபோட்டோ அனுப்புகிறார்கள்.

இன்னும் சில பகுதிகள் மட்டும் இங்கு எடுக்க வேண்டியது தான் மிச்சமிருக்கிறதாம். நவம்பர் 7 கமல் பிறந்தநாள் அன்று வெளியிட தீவிர முயற்சிகள் நடக்கின்றன. தள்ளிப்போனால் டிசம்பர் 1-ல் வெளியிடப்படலாம்.


Sabash Nayudu shooting update

ஆனால் கமல் அதற்குள் அடுத்த படத்துக்கே தயாராகிவிட்டார். முழு காமெடி படமான சபாஷ் நாயுடுக்கு அடுத்து என்ன படமாக இருக்கும்?


உங்கள் யூகம் சரிதான். அது முழுநீள ஆக்‌ஷன் படம். விமானக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் படம். படத்தில் கமலுக்கு ஜோடி கிடையாதாம். கமல் எழுதிய கதை, திரைக்கதையை இயக்கவிருப்பது அவரது அசிஸ்டெண்ட் ராஜேஷ் எம்.செல்வா.


இவர் தூங்காவனம் படத்தை இயக்கியவர். இப்போது சபாஷ் நாயுடு படத்தில் தயாரிப்பு மேற்பார்வையைக் கவனித்துக் கொள்கிறார்.

English summary
Kamal Hassan is almost complete his Sabash Nayudu shooting and now preparing for next with Rajesh M Selva.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos