»   »  ஜிலு ஜிலு உடையில் தேனியில் ஜில்லாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்

ஜிலு ஜிலு உடையில் தேனியில் ஜில்லாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

ரஜினி முருகன் படம் ஜூலை 17ல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் நடிக்கும் சிவகார்த்திக்கேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடி ஜிலு ஜிலு உடையணிந்து தேனி பகுதியில் ஜில் ஆட்டம் போட்டுள்ளனர்.

காக்கி சட்டை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


சமீபத்தில் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராகவும், பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். காரைக்குடி பகுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது.


ஜூலை 17ல் ரிலீஸ்

ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக், ஆடியோ, படத்தின் ரிலீஸ் ஆகிய தேதிகள் ஆகியவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.


ஜூலை 17ஆம் தேதி ரஜினிமுருகன் ரிலீஸ் ஆக உள்ளதை ஒட்டி இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது.


 


 


நாயகிக்கு நலமில்லை

இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷுக்கு உடல் நலமில்லாததால் ஒத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு, தற்போது அவர் நலமடைந்து திரும்பியதால் விறுவிறுப்படைந்துள்ளது.


தேனியில் படப்பிடிப்பு

தேனியில் ஒருசில உரையாடல் பகுதியின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.


பாடல் காட்சி

இந்த பாடல் காட்சி கொடைக்கானல் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட உள்ளதாம். இந்த பாடலுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைகிறது என கூறப்படுகிறது.


மீண்டும் ஊதா கலரு ரிப்பன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இமான் இசையில் உருவான ஊதா கலரு ரிப்பன் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதேபோல ஒரு பாடலுக்கு ஜிலு ஜிலு உடையணிந்து ஆட்டம் போட்டுள்ளனர். எனவே இந்தப் பாடலும் ஹிட் அடிக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.


English summary
Sivakarthikeyan’s Rajini Murugan movie final schedule shooting in Kodaikanal and Theni.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos