» 

கோச்சடையானில் வித்யா பாலன்?

Posted by:
 

கோச்சடையான் படத்தில் ரஜினி ஹீரோ... சினேகா தங்கச்சி என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் இன்னும் உறுதி செய்யப்படாததாகவே உள்ளது.

ஆரம்பத்தில் அனுஷ்காதான் ஹீரோயின் என்றார்கள். அப்படியே கத்ரினா கைஃப், கரீனா கபூர், தீபிகா படுகோன் என ஒரு ரவுண்ட் அடித்து மீண்டும் கத்ரினா கைஃதான் ஹீரோயின் என்றார்கள்.

ஆனால் அவரோ வேறு படங்களில் பிஸியாக உள்ளாராம் சௌந்தர்யா கேட்கும் தேதிகளில்.

எனவே இப்போது வித்யா பாலன் நடிப்பார் என்கிறார்கள். ஏற்கெனவே ராணா படத்தில் இவர் நடிப்பதாக இருந்து, பின்னர் விலகியவர் என்பதால், ரஜினி பட ஹீரோயின் என்ற வாய்ப்பை அவர் இந்த முறை பெற விரும்புவதாகத் தெரிகிறது. தி டர்ட்டி பிக்சருக்குப் பின் வித்யாபாலனின் மார்க்கெட் பாலிவுட்டில் வலுவாக உள்ளதால் அவரை சௌந்தர்யா ஓகே செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதற்கிடையே, கோச்சடையானுக்காக மோஷன் கேப்சரிங் பணிகள் நடந்து வருவதாகவும், இதில் ரஜினி பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

Read more about: கோச்சடையான், kochadayan
English summary
Sources from Rajini camp say that Vidhyabalan, the hot heroine in Blyywood may be roped in with Rajini in his animation 3 D Kochadayan.

Tamil Photos

Go to : More Photos