» 

உதயநிதி ஸ்டாலின் எடுக்கும் மெகா வெற்றி விழா!!

Posted by:
 

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்களில் பெரும்பாலானவை உதயநிதி ஸ்டாலின், சன் பிக்சர்ஸ் மற்றும் தயாநிதி அழகிரியால் எடுக்கப்பட்டவை அல்லது வெளியிடப்பட்டவைதான்.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மட்டும் நான்கு வெற்றிப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த ஆண்டு. விண்ணைத்தாண்டி வருவாயா, மதராஸபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் மைனா ஆகிய படங்கள் உதயநிதியால் வாங்கி வெளியிடப்பட்டு பெரும் வெற்றி பெற்றவை.

இந்த நான்கு படங்களுமே 100 நாட்களைத் தாண்டிய ஓடியதோடு தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்ததால் இவற்றின் வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வித்தியாசமான வெற்றி விழாவாக இதனை அவர் நடத்த உள்ளார்.

ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடக்கின்றன. இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Read more about: உதயநிதி ஸ்டாலின், மதராஸபட்டினம், மைனா, வெற்றி விழா, big paln, madrasapattinam, mynaa, success, udayanidhi stali
English summary
Udayanidhi Stalin, one of the leading producers in Tamil cinema planning big to celebrate his recent success in films like Vinnaithandi Varuvaya, Madrasapattinam, Boss Engira Baskaran and Mynaa in lavish function.

Tamil Photos

Go to : More Photos