»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கண்ணம்மாவை அடுத்து ராம.நாராயணன் இயக்கும் மண்ணின் மைந்தன் என்ற படத்திற்கு திமுக தலைவர்கருணாநிதி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுகிறார்.

கடந்த 8 ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு திரைக்கதை ,வசனம் எழுதாமல் இருந்த கருணாநிதி, அண்மையில்கண்ணம்மா படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத ஒப்புக் கொண்டார்.

பாபா விக்ரம் தயாரித்து இயக்கும் இந்தப் படத்தில் மீனா, விந்தியா, வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர்.படத்தின் முதல் ஷெட்யூலுக்கான வசனத்தை கோத்தகிரியில் எழுதிய கருணாநிதி, மீதி வசனத்தை எழுதகொடைக்கானல் சென்றுள்ளார்.

இந் நிலையில் மண்ணின் மைந்தன் என்ற பெயரில் ராம.நாராயணன் இயக்கவிருக்கும் படத்திற்கு திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுத கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுவரை 111 படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்திருக்கும் ராம.நாராயணன், கருணாநிதியின்திரைக்கதை, வசனத்தில் வீரன் வேலுத்தம்பி, மக்கள் ஆணையிட்டால் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

மண்ணின் மைந்தன் படத்தை அழகர் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவை விஸ்வநாதனும்,படத்தொகுப்பை ராஜகீர்த்தியும் கவனிக்கிறார்கள். கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகியோருடன் இணைந்துகருணாநிதியும் பாடல் எழுதுகிறார்.

படத்தின் கதாநாயகன், கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. படம் குறித்து ராம. நாராயணன்கூறுகையில், படத்தின் கதாநாயகன் வீரம், விவேகம் நிறைந்தவன். உண்மையின் பக்கம் நிற்பவன். பிரபல நடிகர்,நடிகைகள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்கள். குறுகிய கால தயாரிப்பாக இந்தப் படம் வெளிவரும் என்றுகூறினார்.

ராம. நாராயணன் காரைக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos