» 

தமிழ்ப் பெயர் வேட்டையில் உதயநிதி!

Posted by:

Hansika and Udayanithi
'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஹீரோ உதயநிதி & '1305' என்ற ஆங்கில மாத இதழ் ஆசிரியர் கிருத்திகா ஜோடிக்கு, தாங்கள் எதிர்பார்த்தது போன்றே பெண் குழந்தை பிறந்ததில் ஏக சந்தோஷம்.

இப்போது அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தீவிரமாக பெயர் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். ஆண் குழந்தை பிறந்திருந்தால் இவ்வளவு சிரமம் இருந்திருக்காது. குடும்ப வழக்கப்படி தமிழ்ப் பெயருடன் 'நிதி' சேர்த்து வேலையை சுலபமாக்கிவிடலாம். அந்த வகையில்தான் தன் மூத்த மகனுக்கு 'இன்பநிதி" சுருக்கமாக 'இன்பா" என பெயர் வைத்தனர்.

பெண் குழந்தை என்பதால் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் இருந்தும் என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை கேட்டு வாங்கியபடி இருக்கிறார்களாம். குழந்தையின் தாத்தா ஸ்டாலினும் சில பெயர்களைச் சொல்லியிருக்கிறாராம்.

அநேகமாக ஒன்றிரண்டு நாட்களில் பெயர் தேர்வு இறுதிகட்டத்தை எட்டி அந்தப் பெயர் குடும்பத் தலைவர் கருணாநிதியால் சூட்டப்படும் என்று தெரிகிறது.

Read more about: உதயநிதி ஸ்டாலின், தமிழ்ப் பெயர், பெண்குழந்தை, udhayanidhi stalin, tamil name, female baby, tamil cinema
English summary
Udhayanithi Stalin, the producer turned hero in Oru Kal Oru Kannadi is seriously searching for a Tamil name. But this time it is not for a movie, but for his new born female baby!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos