»   »  அழகிய தமிழ் மகனாக... வேட்டி கட்டி ‘கேக்’ வெட்டிய குட்டி அஜித்!

அழகிய தமிழ் மகனாக... வேட்டி கட்டி ‘கேக்’ வெட்டிய குட்டி அஜித்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் - ஷாலினி தம்பதியின் இளைய மகனான ஆத்விக்கின் முதலாம் பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பெரிய நடிகர்களின் பிறந்தநாள் என்றால் அவர்களுடைய தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் கட் அவுட் வைத்து, பேனர் கட்டி, கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், தல என ரசிகர்களால் அன்பாகக் கொண்டாடப்படும் அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளையும், அவரது ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி அசத்தி விட்டனர்.

கோலாகலக் கொண்டாட்டம்...

நட்சத்திர தம்பதிகளாக அஜித் - ஷாலினியின் இளைய மகன் ஆத்விக்கின் முதல் பிறந்ததினம் நேற்று கொண்டாடப்பட்டது. அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் கட்டியும் ஆத்விக்கின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

பிரியாணி விருந்து...

பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் அஜித் ரசிகர்கள் வழங்கினர். அஜித் ரசிகர்கள் சார்பில் மதுரையில் முதியோர் இல்லங்களில் பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது. அஜித் பிரியாணி செய்வதில் வல்லவர் என்பது நினைவு கூரத்தக்கது.

பிறந்தநாள் விழா...

இது தவிர ஆத்விக்கின் பிறந்தநாள் விழாவிற்கும் அஜித் குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

சமூகவலைதளப் பக்கத்தில்...

இந்த பிறந்ததின கொண்டாட்ட போட்டோக்களை ஷாலினி, அவரது தங்கையும், நடிகையுமான ஷாமிலி ஆகியோர் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

அழகிய தமிழ் மகன்...

அதில், வேட்டி கட்டி கேக் வெட்டுகிறார் குட்டி தல ஆத்விக். கூடவே, அவரது அக்காவும், அஜித்தின் மூத்த மகளுமான அனோஸ்கா அழகிய நீல நிற கவுனில் காட்சியளிக்கிறார்.

வைரல்...

இந்தப் புகைப்படங்கள் தற்போது அஜித் ரசிகர்களால் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பாஸ்போர்ட் அலுவலகத்தில்...

சமீபத்தில் வெளிநாடு செல்வது தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அஜித் வந்திருந்தபோது தான் ஆத்விக்கின் புகைப்படம் முதன்முதலில் ஊடகங்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அஜீத் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவியது.

பச்சைக் குத்திக் கொண்ட ரசிகர்கள்...

ஆத்விக்கின் உருவத்தை அஜித் ரசிகர்கள் சிலர் பச்சைக்குத்திக் கொண்ட சம்பவங்கள் கூட நடந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith's son Aadvik celebrated his first birthday Wednesday, March 2. The actor threw a party for his family members and close friends at a private hotel in Chennai. His online fans club shared about the celebration on Twitter and readers can find the photos below:
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos