» 

மறுபடியும் 'சிந்து சமவெளி'... இது அமலாவின் (விபரீத) ஆசை!

Posted by:

"நான் நடிச்சதிலேயே நல்ல படம் சிந்துசமவெளிதான். அந்தப் படத்தில்தான் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு... ஸ்கோப் இருந்துச்சு. இப்போது அந்தப் படத்தை மறுவெளியீடு செய்தாலும் ஒத்துழைக்க தயாரா இருக்கேன். ரிலீஸ் பண்ண முடியுமா பாருங்க..."

-படத்தின் ஹீரோ சொன்னதில்லை இது. நாயகியாக நடித்த அமலா பால் தயாரிப்பாளரிடம் இப்படி கூறி வருகிறாராம்.

சிந்து சமவெளி என்பது என்ன மாதிரி படம் என்பது தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் ஒரு சின்ன பிளாஷ்பேக்...

இந்தப் படத்தில் மகன் ராணுவத்துக்குப் போய்விட, காம இச்சை கொண்ட மருமகளும் மாமனாரும் 'சேர்ந்து'விடுவார்கள்.

இந்த அருமையான 'குடும்ப காவியம்' ரிலீஸ் ஆனபோது அதை எதிர்க்காத மீடியா, கட்சிகள், சமூக அமைப்புகள் இல்லை எனும் அளவுக்கு நிலைமை மோசமானது. படத்தின் இயக்குநர் சாமி, இப்படியொரு படத்தை எடுத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தலைமறைவானவர்தான்... இன்னும் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

படத்தின் ஹீரோயின் அமலா பால் கொஞ்ச நாட்கள் இந்தப் படம் பற்றி வாயே திறக்காமலிருந்தார். இப்போது மைனா, தெய்வத்திருமகள், வேட்டை படங்களில் பாப்புலராகிவிட்ட நிலையில், சிந்து சமவெளி குறித்துப் பேச ஆரம்பித்துள்ளாராம்.

பொதுவாக வெறும் நடிகைகள் முன்னணி நடிகை ஆனபிறகு, அவர்கள் தவறாமல் சொல்லும் விஷயம்... 'ஒரு படத்திலாவது விலைமாது பாத்திரத்தில் நடிக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பை வெளிப்படுத்த முடியும்' என்பது.

அமலா பால் கொஞ்சம் வித்தியாசமானவர்... அதனால் தான் ஏற்கெனவே கிட்டத்தட்ட அந்த மாதிரி நடித்துவிட்ட 'சிந்து சமவெளியை மறுபடியும் வெளியிடுங்கள்' என்று கேட்கிறாராம்.

அமலாவின் இந்த விருப்பத்தைக் கேட்டபிறகு, அமலா பாலின் 'சிந்து சமவெளி நாகரீக'த்தை பரப்பும் வேலைக்கு தயாராகிவருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்!

Read more about: amala paul, sindhu samaveli, அமலா பால், சிந்து சமவெளி
English summary
Actress Amala Paul wanted to release her controversial movie Sindhu Samaveli again to get good viewership.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos