Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
பாலா படம்... இசைஞானி இளையராஜாவின் 1000வது படம்!
சென்னை: பாலா இயக்கும் கரகாட்டம் படம் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1000வது படமாக வருகிறது.
1976-ம் ஆண்டு அன்னக்கிளி மூலம் தனி இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. அதற்கு முன் 200 படங்களுக்கு மேல் ஜிகே வெங்கடேஷிடம் உதவியாளராக, இசை நடத்துநராகப் பணியாற்றியிருந்தார்.
அன்னக்கிளிக்குப் பின்..
அன்னக்கிளிக்குப் பிறகு இளையராஜாவின் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு நிமிடங்களும் மகத்தானவையாக மாறின. நிற்க நேரமில்லாத அளவுக்குப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார் ராஜா.
ஆண்டுக்கு 40 படங்கள்:
எண்பதுகளில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 40 படங்களுக்கு மேல் தமிழில் இசையமைத்தார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியிலும் அவரது இசைப் பணி தொடர்ந்தது.
ஆண்டுக்கு 70 படங்களாக உயர்ந்து..
தொன்னூறுகளின் ஆரம்பத்தில், ஒரு ஆண்டில் 70 படங்களுக்கு இசையமைத்து பிரமிக்க வைத்தவர் ராஜா. இது உலகில் வேறு எந்த இசையமைப்பாளராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சாதனை.
நிமிடங்களில் வந்த சாகாவரம் பெற்ற பாடல்கள்...
ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற தேன் பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.
இப்படி ஓயாத தேனியைப் போல சுறுசுறுப்புடன் இயங்கும் ராஜா, தமிழ் திரையுலகில் யாரும் எட்ட முடியாத மகத்தான உயரத்தை எட்டியிருக்கிறார்.
1000வது படம்
இயக்குநர் பாலா இயக்கும் புதிய படமான கரகாட்டம்தான் இசைஞானி இசையமைக்கும் 1000வது படமாகும். இசையின் பிதாமகனின் 1000வது படத்தை இயக்கும் பெருமையோடு இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார் பாலா.
மொத்தம் 12 பாடல்கள்...
இந்தப் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களை 6 நாட்களில் உருவாக்கி ஏற்கெனவே சாதனைப் படைத்தவர் இளையராஜா என்பது நினைவிருக்கலாம்.
இயக்குநர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் புதிய படத்துக்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் தகவல்.