»   »  விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா...? - புகழ்ந்து தள்ளும் ஹீரோயின்கள்!!

விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா...? - புகழ்ந்து தள்ளும் ஹீரோயின்கள்!!

Posted by:
Subscribe to Oneindia Tamil

பெண்களுக்கு ரொம்ப்...ப பிடித்தமான ஹீரோவான நம்ம விஜய் பத்தி கூட நடிச்ச ஹீரோயின்கள் என்ன சொல்றாங்கன்னு கேட்போமா?

ஸ்ருதிஹாசன்

"வெரி நைஸ் பெர்சன். அவ்ளோ பெரிய ஸ்டார். ஆனா செட்ல அப்படி நடந்துக்கவே மாட்டார். டவுன் டூ எர்த் பெர்சன். ரொம்ப அமைதியாவே இருப்பார். பாசிட்டிவான கேரக்டர்."

காஜல் அகர்வால்

"விஜய் சார் கூட வொர்க் பண்றது எப்பவுமே ஃபெண்டாஸ்டிக் அனுபவம். அவர் கூட நடிக்கும்போது செம ஜாலியா இருக்கும். என்ஜாய் பண்ணி நடிக்கலாம். ஹீ ஈஸ் வெரி ஸ்வீட் பெர்சன்.விஜய் அமேஸிங் டான்சர்கறதால அவர் கூட டான்ஸ் பண்றது சூப்பர் அனுபவமா இருக்கும்."

ஹன்சிகா

"அதிகம் பேசவே மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்ல இவர் இருக்காரான்னே சந்தேகமா இருக்கும். அவ்வளவு அமைதி. ஆனா ஷாட்ல அவர் காட்டுற பெர்ஃபார்மன்ஸும், டான்ஸ் ஆடுற வேகமும் யாருக்கும் வராது."

சமந்தா

"விஜய் சாரோட டான்ஸ் பத்தி எல்லாரும் சொல்லிருக்காங்க... ஆனா கத்தி ஷூட்டிங்ல ஸாங் ஷூட் பண்ணும்போது ஒரு நிமிஷம் அப்படியே ஷாட்டை மறந்து நின்னுட்டேன். அப்படி ஒரு அமேஸிங் டான்ஸர். அவரோட ஹார்ட் வொர்க் தான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்துருக்கு."

அனுஷ்கா

"அவர் கூட முதல் ஸாங் பண்ணின அனுபவம் இன்னும் மனசுல இருக்கு. 'என் உச்சி மண்டையில...' ஸாங். ஷூட்டுக்கு முன்னாடி அப்படியே டயர்டா, இவரா டான்ஸ் ஆடப் போறாருகற மாதிரி உட்கார்ந்துருந்தாரு. அந்த நேரத்துல நான் ஒரு நாலைஞ்சு தடவை ரிகர்சல் பார்த்துட்டே இருந்தேன். ஷாட்டுக்கு போனோம். ஸ்டெப்ஸை ஒரு முறை லேசா தலையை ஆட்டிக்கிட்டே கேட்டுகிட்டார். அவ்வளவுதான். ஷாட்ல நான் ஷாக்காகி டான்ஸ் கூட ஆடாம நின்னுட்டேன். என்னை பொறுத்தவரைக்கும் இந்தியாவிலேயே சிறந்த டான்ஸர் விஜய்தான்!"

இலியானா

"விஜய் கூட நடிக்கப்போறோமோன்னு சின்ன பதட்டம் இருந்துச்சு. ஆனா ஃபர்ஸ்ட் டே ஷூட்லயே என்னை கூலாக்கிட்டாரு விஜய். எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப சிம்பிளா நடந்துக்கிட்டாரு. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், நான்னு அது ஒரு ஃபோர் இடியட் கூட்டணியாத் தான் இருந்துச்சு. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்."

அமலா பால்

"இன்டஸ்ட்ரிகுள்ள வந்தப்ப விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா நிறைவேறும்னு நினைக்கலை. ரொம்ப ஹம்பிள்டு பெர்சன். சில்டு பெர்சனாலிட்டி. கேமரா ஆன் ஆகிட்டா அப்படியே டோட்டலா மாறிடுவாரு. சீனியர் ஹீரோவாவே தெரியலை. இன்னமும் ரொம்ப யங்காவே இருக்காரு.''

தமன்னா

"விஜய் கூட டான்ஸ்னாலே எனக்கு பயமா இருக்கும். நாம எத்தனை தடவை ரிகர்சல் பார்த்துட்டு வந்தாலும் அவரோட டான்ஸுக்கு முன்னாடி காலியாயிடுவோம்."

கீர்த்தி சுரேஷ்

"விஜய் சார் நடிச்ச நிறைய படங்கள் பார்த்திருக்கேன். அவரோட தீவிர ரசிகையான எனக்கு அவர் கூடவே நடிக்க சான்ஸ் கிடைக்கும்னு நினைச்சுகூட பார்க்கலை. படத்தோட பூஜையில தான் ஃபர்ஸ்ட் மீட் பண்ணினேன்.

‘உங்களை பத்தி கேள்விப்படுறேன். பெரிய இடத்துக்கு வருவீங்க...'ன்னு சொன்னார். ஒரு பெரிய ஹீரோகற நினைப்பே சுத்தமே வராத அளவுக்கு என்கிட்ட நடந்துக்கிட்டார். அவர் கூட நடிச்சப்ப மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பயமாகவும், படபடப்பாகவும் இருந்தது. அதைப்போக்கி என்னை சகஜமாக்கி நடிக்க வைத்தார்."

 

English summary
Vijay's heroines are sharing their acting experience with Vijay on his birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos