» 

'கொலைவெறி'யை '2011- ன் டாப் பாடலாக' தேர்வு செய்த சிஎன்என்!

Posted by:

தனுஷ் எழுதிப் பாடி பெரும் சர்ச்சை மற்றும் பாப்புலாரிட்டியைச் சம்பாதித்துள்ள ஒய் திஸ் கொல வெறிடி..-யை சிறந்த பாடலாக பிரபல சிஎன்என் தொலைக்காட்சி தேர்வு செய்துள்ளது.

யுட்யூபின் கோல்ட் விருது, டைம் இதழில் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து இந்தப் பாடலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அடுத்ததாக, சிஎன்என் தொலைக்காட்சியின் '2011-ன் டாப் பாடல்' என்ற பாராட்டையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது.

இந்தப் பெருமையைப் பெறும் முதல் தமிழ் (?) பாடல் இதுதான்.

இதற்கிடையே, பிரதமரின் விருந்தில் நேற்று முன்தினம் பங்கேற்ற தனுஷ், இன்று சென்னை திரும்பினார். இந்த ஆண்டு தனது புத்தாண்டு தினத்தை பெற்றோர் மற்றும் மாமனார் ரஜினியின் ஆசியுடன் தொடங்குவேன் என்று கூறிய அவர், அன்றைய தினம் தன் மனைவி ஐஸ்வர்யா பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளார்.

Read more about: தனுஷ், kolaveri, கொலவெறி, danush
English summary
The latest addition to Kolaveri is that the song has been crowned as CNN-The Top Song of the Year 2011.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos