twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பல ஆண்டுகளுக்குப் பிறகு எல்பி ரிகார்ட்கள் விற்பனையில் புதிய சாதனை... சிடி விற்பனை சரிவு!

    By Shankar
    |

    லண்டன்: வினைலில் தயாரிக்கப்படும் இசைதட்டுகள் (ரிகார்ட்கள்) விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளதாகவும், டிஜிட்டல் மற்றும் சிடிகள் விற்பனை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த செய்தி, இன்னமும் எல்பி ரிகார்டுகள் மூலம் இசை கேட்டு வரும் ஆயிரக்கணக்கானோருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

    இசைத் துறையில் வினைல் ரிகார்டுகள் சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் தொன்னூறுகள் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது. வினைல் ரிகார்டுகளில், அனலாக் முறையில் இசையைப் பதிவு செய்து விற்று வந்தார்கள்.

    துல்லிய இசை

    துல்லிய இசை

    இந்த ரிகார்டுகளிலிருந்து வரும் இசையில் துல்லியமும் அழுத்தமும் இருக்கும். கேட்கும்போதே மனம் பரவசப்படும். குறிப்பாக காதுகளை செவிடாக்காது.

    ஆனால் குறுந்தகடு எனப்படும் ஆடியோ சிடியை 1982-ல் சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, ரிகார்ட் விற்பனையை திட்டமிட்டு குறைத்துக் கொண்ட சோனி, சிடிகளில் புதிய பட பாடல்களை வெளியிட ஆரம்பித்தது.

    எஜமான் ரிகார்ட்

    எஜமான் ரிகார்ட்

    இதனால் படிப்படியாக ரிகார்ட்களில் பாடல்கள் வருவது குறைந்தது. இந்தியாவைப் பொருத்தவரை, இந்தியிலும் தமிழிலும்தான் அதிக அளவு ரிகார்டுகள் வந்தன. பின்னர் 1993-ல் வெளியான எஜமான் படத்தோடு ரிகார்டுகள் வெளியிடுவது நின்றுபோனது. இந்தியில் தில் தோ பாகல் ஹை படத்துடன் ரிகார்ட் உற்பத்தி நிறுவனத்தை இழுத்து மூடியது எச்எம்வி.

    ஆனால் மற்றொரு பெரிய ஆடியோ நிறுவனமான டி சீரிஸ், தனது ரிகார்ட் ப்ளான்டில் அவ்வப்போது இசைத்தட்டு வெளியிட்டு வந்தது.

    மீண்டும்

    மீண்டும்

    ஆனால் வினைலில் இசை கேட்டு மகிழந்தவர்களால், அதிலிருந்து வேறு இசைக் கேட்பு முறைக்கு மாற முடியவில்லை.

    இந்த நிலையில் 2001-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மெல்ல இசைத் தட்டு வெளியாகத் தொடங்கியது, அமெரிக்காவிலும் பிரிட்டனிலும். 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் புதிய ரிகார்ட் பிளேயர்களை ஆடியே டெக்னிகா, லெங்கோ, டெனான், ரெகா, கர்ராட், தோர்ன் ஆகிய நிறுவனங்கள் வெளியிட ஆரம்பித்தன.

    அமெரிக்காவில்

    அமெரிக்காவில்

    இன்று அமெரிக்காவில் ஆண்டுக்கு 15 லட்சம் ரிகார்டுகள் விற்பனையாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் இசைத்தட்டு விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    இந்தியாவில் இந்திப் பட உலகில் மட்டும் அவ்வப்போது பெரிய படங்களின் எல்பி ரிகார்டுகள் வெளியாகின்றன. குச்குச் ஹோதா ஹை, ஜோதா அக்பர், குரு, லகான், தீஸ் மார் கான், ரங் தே பசந்தி, சமீபத்தில் வந்த ரா ஒன் போன்றவை வினைல் ரிகார்டுகளாக வந்துள்ளன. மேலும் பாம்பே டு கோவா, சோட்டே நவாம் போன்ற பழைய சூப்பர் ஹிட் படங்களின் பாடல்களையும் மீண்டும் எல்பி ரிகார்ட்டுகளாக தர ஆரம்பித்துள்ளனர்.

    தமிழில்...

    தமிழில்...

    ஆனால் தமிழில் எஜமானுக்குப் பிறகு வேறு எந்த தமிழ்ப் படப் பாடல்களையும் ரிகார்ட் வடிவில் வெளியிடவில்லை. கோச்சடையான் படத்தின் பாடல்களை எல்பி ரிகார்ட் வடிவில் வெளியிட சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக முன்பு கூறப்பட்டது. இந்தியில் அடுத்து வரவிருக்கும் எல் பி ரிகார்ட் சென்னை எக்ஸ்பிரஸ்.

    விலை எக்கச்சக்கம்

    விலை எக்கச்சக்கம்

    சர்வதேச அளவில் இன்றைக்கு பெரும்பாலான இசைக் குழுக்கள் தங்களின் படைப்புகளை ரிகார்ட் வடிவில்தான் முதலில் வெளிக் கொணர்கின்றன. இந்தியாவில் இப்போது எல்பி ரிகார்டுகளுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், ரிகார்டுகள் உருவாக்க ஆகும் செலவு மிக அதிகமாக உள்ளதாலும் ஆடியோ நிறுவனங்கள், தயாரிக்க தயக்கம் காட்டுகின்றன.

    முன்பு 20 ஆண்டுகளவுக்கு முன் 85 ரூபாய்க்கு விற்கப்பட்ட இசைத்தட்டை, இப்போது மீண்டும் உருவாக்கினால் அதன் விலை ரூ 1000 வரை வைத்தால்தான் கட்டுப்படி ஆகும் என்கிறார்கள் ஆடியோ கம்பெனிகாரர்கள்.

    2013 நிலவரம்

    2013 நிலவரம்

    இந்த நிலையில் எல்பி ரிகார்ட்களின் விற்பனை உலகளவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாக பில்போர்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    2013 நிலவரப்படி டிஜிட்டல் இசைக்கு முதல்முறையாக இப்போதுதான் இறங்குமுகம் தொடங்கியுள்ளது. டிஜிட்டல் இசையை வாங்குவோர் எண்ணிக்கை 6 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், டிஜிட்டல் ஆல்பம் விற்பனையும் முதல்முறையாக 1 சதவீதம் வரை குறைந்துவிட்டதாகவும் பில்போர்ட் அறிக்கை கூறுகிறது.

    சிடி விற்பனையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மட்டும் 14.5 சதவீத வீழ்ச்சியடைந்துள்ளது.

    மீண்டும் ரிகார்டுகள் அலை...

    மீண்டும் ரிகார்டுகள் அலை...

    ரிகார்டுகள் விற்பனை கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த ஒரு ஆண்டில் 31.9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் டர்ன்டேபிள்கள் எனப்படும் ரிகார்ட் ப்ளேயர் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    எச்எம்வி நிறுவனம் லெங்கோ ரிகார்ட் பிளேயர்களை விற்க ஆரம்பித்துள்ளது.

    எம்பி 3க்கு சாவு மணி

    எம்பி 3க்கு சாவு மணி

    இசையின் துல்லியத் தன்மையைக் கெடுத்ததாக இசைக் கலைஞர்கள் குற்றம்சாட்டும் எம்பி 3 இசை வடிவம் இப்போது அழிவை நோக்கிப் போகத் தொடங்கியுள்ளது. இசையை துல்லியமாகக் கேட்க மீண்டும் ரிகார்டுகளை விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர். விலை மட்டும் சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டால் இந்தியாவில் ரிகார்ட் விற்பனை மீண்டும் உச்சத்துக்கு வரும் என்று தெரிகிறது. ரிகார்டுகளில் வரும் இசையை அத்தனை சுலபத்தில் டவுன்லோடு செய்யவெல்லாம் முடியாது என்பதால், ஆடியோ சிடி பைரசியும் குறையும்.

    English summary
    After years of highs and then a plateau, digital music sales saw their first decrease in 2013. Last year, digital song purchases dropped almost six percent according to a Billboard report, while digital album sales dropped 0.1 percent. Compact discs continued their downward spiral as well, and took a 14.5 percent loss. On the other side, pure analog music showed an increase of 31.9 percent -- representing a full two percent of music sales.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X