twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் ஹாஸனின் மறக்க முடியாத 10 படங்கள்!

    By Shankar
    |

    கமல் ஹாஸனின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவரது சிறந்த படங்களைத் தொகுப்பது ஊடகங்களின் வழக்கம்.

    இந்த முறை அந்த வேலையை ஒன் இந்தியா செய்கிறது. கமல் நடிப்பில், இயக்கத்தில், தயாரிப்பில் வெளியான சிறப்பான சில படங்களை இங்கே தருகிறோம். இவை எவர்கிரீன் க்ளாஸிக் அந்தஸ்து பெற்றவை...

    மகாநதி

    மகாநதி

    கமல்ஹாஸனின் மிகச் சிறந்த படங்களின் வரிசையில் எப்போதும் முதலிடம் இந்தப் படத்துக்குத்தான். இந்த ஒரே படத்தில்தான் எத்தனை சமூக அவலங்களை அலட்டிக் கொள்ளாமல் தோலுரித்திருக்கிறார் கமல்... பாசம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன காட்சிகள்.. மனதை நெகிழ்த்திய இசை..

    தேவர் மகன்

    தேவர் மகன்

    சில காட்சிகள்தான் என்றாலும் நடிகர் திலகம் என்ற அற்புதமான கலைஞனை எந்த அளவு இந்திய அரசு புறக்கணித்துவிட்டது என்பதை ஆணி அடித்த மாதிரி காட்டிய படம். தமிழின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்று.

    16 வயதினிலே

    16 வயதினிலே

    கமல் என்ற ரொமான்டிக் ஹீரோ எந்த இடத்திலும் வெளிப்பட்டு விடாத அளவுக்கு சப்பாணியாக வாழ்ந்திருந்தார் கமல் இந்தப் படத்தில். தமிழ் சினிமாவில் பல வகையிலும் புரட்சி செய்த படம்.

    இந்தியன்

    இந்தியன்

    ஊழலின் வலியை ஒவ்வொரு பார்வையாளனும் உணரும் வகையில் சொன்ன படம் இந்தியன். வில்லத்தனம் நிறைந்த இளைஞனும், தேசபக்தி மிக்க முதியவருமாக இரு வேடங்கள் கமலுக்கு. ரஹ்மானின் துள்ளல் இசை, கவுண்டமணியின் இயல்பான காமெடி என அனைத்து வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்திய பொழுதுபோக்குப் படம்.

    நாயகன்

    நாயகன்

    இந்தப் படத்தின் காட்சிகளில் காட் பாதரின் பாதிப்பு தெரிவதாக விமர்சிக்கப்பட்டாலும், இந்திய சினிமாவைப் பெருமைப்படுத்திய உலகத் தரமான படங்களுள் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    ஒரு கைதியின் டைரி

    ஒரு கைதியின் டைரி

    ஒரு த்ரில்லர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தின் திரைக்கதையைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு இயக்குநரும்.

    மூன்றாம் பிறை

    மூன்றாம் பிறை

    எத்தனை பேரை இளக வைத்த நடிப்பு அது... கமல் இந்தப் படத்திலும் வாழ்ந்திருந்தார். இசை, ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங் என அனைத்து வகையிலும் ஒரு காவியத்துக்கு நிகராக அமைந்த படம்.

    சலங்கை ஒலி

    சலங்கை ஒலி

    இப்போது நினைத்தாலும் மனசுக்குள் வந்துபோகின்றன கமலின் அந்த நாட்டிய விமர்சனக் காட்சியும், கிணற்று நடனமும்... எத்தனை அற்புதமான படைப்பு!

    ஹே ராம்

    ஹே ராம்

    வசூல் ரீதியில் இந்தப் படம் திருப்திப்படுத்தாமல் போயிருக்கலாம். ஆனால் ஒரு மிகச் சிறந்த இயக்குநராக கமலை வெளிப்படுத்தியது. காட்சிகளில் அத்தனை நேர்த்தி.

    மைக்கேல் மதன காம ராஜன்

    மைக்கேல் மதன காம ராஜன்

    நான்கு கமல்கள்... நால்வரும் வெவ்வேறு குணங்கள், உடல்மொழிகள் கொண்டவர்கள். இதை திரையில் காட்ட எத்தனை அபார உழைப்பு தேவை? நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறதல்லவா... ஆனால் அதை சாதித்துக் காட்டினார் கமல். ஒரு சாதாரண பழிவாங்கும் கதையை எப்படியெல்லாம் வித்தியாசப்படுத்திக் காட்டலாம் என்பதில் கமலுக்கு இந்தப் படத்தில் பிஎச்டி பட்டமே தரலாம்!

    Read more about: kamal birth day கமல்
    English summary
    Here are Kamal's top 10 movies of his career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X