» 

வாஜ்பாய், 'கஜினி'யுடன் ரஜினிகாந்த்

Posted by:
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62வது பிறந்தநாளையொட்டி அவர் பிற பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 62வது பிறந்தநாள் அதிசய நாளான 12.12.12 அன்று கொண்டாடப்பட்டது. சாதாரண பஸ் கண்டக்ராக இருந்த அவர் சினிமாவில் நடிக்க தமிழகத்திற்கு வந்தார். இன்று தமிழகமே கொண்டாடும் நடிகராக உள்ளார். ரஜினி என்றால் நம் நினைவுக்கு வருவது அவரது ஸ்டைலும், பன்ச் டயலாக்கும் தான்.

பேச்சலராக தமிழகத்திற்கு வந்த ரஜினிக்கு லதா என்ற ஜோடி கிடைத்தது. ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ள ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் ஆசைப்படுகின்றனர். அவ்வாறு அவர் பல பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அத்தகைய அரிய புகைப்படங்கள் இதோ....

ரஜினிகாந்துடன் ரித்திக் ரோஷன்

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சிறுவனாக இருந்தபோது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட படம்.

கே.பாலச்சந்தர், கமலுடன் ரஜினி

ரஜினிகாந்த் தனது குரு பாலச்சந்தர், தனது நண்பர்-வழிகாட்டி கமலுடன் பவ்யமாக இருக்கும் படம்.

சிரஞ்சீவியுடன் ரஜினி

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

கிரிஷ் கர்னாடுடன் ரஜினி

ஞானபீடம் விருது வாங்கிய எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், பாலச்சந்தருடன் விழா ஒன்றில் ரஜினி.

அஜீத்-ஷாலினி திருமணத்தில் ரஜினி

அஜீத் குமார்-ஷாலினி தம்பதியை வாழ்த்தும் ரஜினி, லதா.

ரஜினியுடன் கஜினி

ரஜினிகாந்தும், ஆமீர் கானும் சேர்ந்து ஆதங்க் ஹி ஆதங்க் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளனர்.

எந்திரன் சிறப்பு ஸ்கிரீனிங்கில் ரஜினி

மும்பையில் எந்திரன்-தி ரோபா படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கில் சங்கர், அமிதாப், ஆமீருடன் ரஜினி.

மோகன் பாபுவுடன் ரஜினி

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

கன்னட சூப்பர் ஸ்டாருடன் நம்ம சூப்பர் ஸ்டார்

கன்னட திரையுலகத்தின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமாருடன் நம் சூப்பர் ஸ்டார்.

வாஜ்பாயுடன் ரஜினி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் பேசி மகிழ்கிறார்.

சரத்பாபுவுடன் ரஜினி

ஆரம்ப காலத்தில் நடிகர் சரத்பாபுவுடன் ரஜினி எடுத்துக் கொண்ட புகைப்படம்.

நாகர்ஜுனாவுடன் ரஜினி

தெலுங்கு நடிகர்கள் மோகன் பாபு, நாகர்ஜுனாவுடன் பேசிக் கொண்டிருக்கும் ரஜினி.

உபேந்திராவுடன் ரஜினிகாந்த்

கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவை சந்தித்தபோது எடுத்த படம்.

விஜயகாந்த், கமல், ரஜினி, சத்யராஜ்

விஜயகாந்த், கமல், சத்யராஜுடன் ஜாலியாக பேசும் ரஜினி.

அஜீத்துடன் சிரித்து மகிழும் ரஜினி

அஜீத் குமாருக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே நல்ல உறவு உள்ளது.

யஷ் சோப்ரா, ரஜினி

அண்மையில் மறைந்த பாலிவுட் இயக்குனர் யஷ் சோப்ராவுடன் ரஜினிகாந்த்.

ஆமீர், கிரண் ராவ், ரஜினி

ஆமீர் கான் தான் பெரிதும் மதிக்கும் ரஜினியுடன். அருகில் ஆமீரின் மனைவி கிரண் ராவ்.

மகளுடன் கிரிக்கெட் பார்க்கும் ரஜினி

மகள் ஐஸ்வர்யா, ஆமீருடன் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் பார்க்கிறார்.

இசைஞானியுடன் சூப்பர் ஸ்டார்

விழா ஒன்றில் விசில் அடிக்கும் ரஜினியைப் பார்த்து சிரிக்கும் இளையராஜா.

எம்.ஜி.ஆருடன் ரஜினி

விழா ஒன்றில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் ரஜினி.

நண்பர்களுடன் ரஜினி

கன்னட நடிகர் அம்பரீஷ், இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா, மோகன்பாபு, சிரஞ்சீவி, குஷ்புவுடன் ரஜினி.

Topics: rajinikanth, pictures, friends, ரஜினிகாந்த், புகைப்படங்கள், நண்பர்கள்
English summary
Thatstamil.com has compiled the rare pictures of Rajinikanth with celebrities as a birthday gift for the superstar.

Tamil Photos

Go to : More Photos