» 

சிவகுமார் மகன் கார்த்திக்கு கல்யாணம்!

Posted by:
Give your rating:

பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ள கார்த்திக்கு வரும் ஜூலை மாதம் 3-ம் தேதி திருமணம் நடக்கிறது.

இது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம். மணப்பெண் ஈரோட்டைச் சேர்ந்தவர்.

இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார் கூறுகையில், "ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம் செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஜூலை 3ம் தேதி கார்த்தி -ரஞ்சனி திருமணம் நடக்கிறது", என்று அறிவித்துள்ளார்.

கார்த்தியுடன் காஜல் அகர்வால், தமன்னா போன்ற வட மாநில நடிகைகளை இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் இருந்தன. இன்னொரு வட மாநிலப் பெண் மருமகளாவதற்குள், நாமே முந்திக் கொள்ளலாம் என கொங்கு நாட்டு மருமகளைத் தேடிப்பிடித்துவிட்டார் போலிருக்கிறது சிவக்குமார்!

கார்த்தி ரஞ்சனி படங்கள்

Read more about: கார்த்தி, சிவகுமார், ரஞ்சனி, திருமணம், sivakumar, karthi, ranjani, wedding,
English summary
Karthi, the fastest rising star in Tamil cinema, is tying the knot with Ranjani, a literature graduate and gold medalist from Stella Maris in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos
 
X

X
Skip Ad
Please wait for seconds

Bringing you the best live coverage @ Auto Expo 2016! Click here to get the latest updates from the show floor. And Don't forget to Bookmark the page — #2016AutoExpoLive