twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரமாண்ட ஐ இசை வெளியீட்டு விழா... சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள்!

    By Shankar
    |

    சொதப்பல்ஸ் ஆஃப் ஐ இசை வெளியீட்டு விழாவைப் பாத்துட்டோம். விழாவில் சுவாரஸ்யமாக எதுவுமே இல்லையா என்ற கேள்வி எழுகிறதல்லவா...

    சில சுவாரஸ்யங்களும் இருக்கத்தான் செய்தன... ஆனால் இவை வாசகர்களுக்குத்தான் சுவாரஸ்யமானவை.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் அப்படி இருந்திருக்குமா எனச் சொல்ல முடியாது!

    அதே மூலைதான்!

    அதே மூலைதான்!

    முன்பு இதே ஆஸ்கார் பிலிம்ஸின் தசாவதாரம் படத்துக்கு ஜாக்கி சான் வந்தாரல்லவா... அந்த விழாவில் நேரு உள்விளாயாட்டரங்கில் செய்தியாளர்களுக்கு எந்த இடத்தை ஒதுக்கினார்களோ.. அதே மூலைதான் இப்போதும். வந்தவர்கள் முகத்தை உத்தேசமாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

    மூன்று மெகா திரைகளை வைத்திருந்தாலும், உருப்படியாக ஒருவரையும் காட்டவில்லை. பொறுமையா ஜெயா டிவில பாத்துக்கட்டும் என்று நினைத்தார்களோ என்னமோ!

    காத்திருந்த ரஜினி

    காத்திருந்த ரஜினி

    ரஜினி வழக்கம்போல சொன்ன நேரத்துக்கு முன்பே வந்துவிட்டார். காரை விட்டு அவர் இறங்குவதை அரங்கத்துக்குள் திரையில் காட்ட, கூட்டம் ஆர்ப்பரித்து எழுந்து நின்றது. ஆனால் அவரை வேறு ஒரு அறையில் அமர வைத்தனர். பின்னர் அர்னால்ட் வந்தார். அவரையும் அந்த அறைக்கு அழைத்துப் போய் ரஜினியை அறிமுகப்படுத்தினர். இருவரும் அருகருகே சில நொடிகள் அந்த அறையில் அமர்ந்திருந்தனர்.

    பிரிச்சிட்டாரே ஷங்கர்

    பிரிச்சிட்டாரே ஷங்கர்

    ஆனால் விழா அரங்குக்குள் வந்ததும் ரஜினி ஒரு பக்கத்திலும், அர்னால்ட் இன்னொரு பக்கத்திலும் அமர, நடுவில் இயக்குநர் ஷங்கர் அமர்ந்து கொள்ள.. ரஜினி - அர்னால்ட் அருகருகே அமரும் காட்சியை, அவர்கள் பேசிக் கொள்ளும் காட்சியைப் பார்க்கக் காத்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் ஏமாற்றம்!

    வராத டகுபதிக்கு நன்றி

    வராத டகுபதிக்கு நன்றி

    நிகழ்ச்சியின் இடையிடையே, தெலுங்குத் திரையுலகிலிருந்து வந்த ராணா டகுபதிக்கு நன்றி நன்றி என்று கூறிக் கொண்டே இருந்தனர். ஆனால் அங்கு அப்படி ஒரு நபர் இருந்தமாதிரியே தெரியவில்லை! அப்புறம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலரைக் கேட்டபோது, 'அவர் வரவே இல்லீங்க' என்றனர்.

    எதுக்கு இந்த கூச்சல்?

    எதுக்கு இந்த கூச்சல்?

    அமலா பாலும் இயக்குநர் விஜய்யும் ஜோடியாக வந்தபோதும், பவர் ஸ்டார் சீனிவாசன் வந்தபோதும் ஏக கூச்சல், ஆரவாரம். எதுக்கு என்றுதான் புரியவில்லை!

    வண்ண விளக்குகளின் நடனம்

    வண்ண விளக்குகளின் நடனம்

    நிகழ்ச்சி தொடங்க மிக மிக தாமதமாகிக் கொண்டே போனபோது, மேற்கத்திய இசைக்கேற்ப வண்ண விளக்குகளின் நடனத்தை அரங்கேற்றினார்கள். உண்மையிலேயே அசத்தலாக இருந்தது.

    அனிருத் பாட்டு

    அனிருத் பாட்டு

    இரண்டே கால் மணி நேர தாமதத்துக்குப் பிறகு, மெர்சலாயிட்டேன் பாடலை அனிருத் பாட, ஒரு வழியாக நிகழ்ச்சி தொடங்கியது. அந்தப் பாடலைப் பாட ரஹ்மான் தன்னை அழைத்தபோது பயமாக இருந்தது என்றார் அனிருத்.

    இந்தப் பாடலை அனிருத்தான் பாட வேண்டும் என்பது தானும் இயக்குநர் ஷங்கரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றார் இசையமைப்பாளர் ரஹ்மான்.

    பிரமிக்க வைத்த விக்ரம்

    பிரமிக்க வைத்த விக்ரம்

    மிருக உருவ தோற்றம் கொண்ட அசுரனாக வேடமணிந்து விக்ரம் ஒரு பாடலில் தோன்றினார்... நிஜமாகவே பிரமித்துப் போனது மொத்த கூட்டமும். ரஜினியும் அர்னால்டும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.

    எமி எங்கேப்பா?

    எமி எங்கேப்பா?

    படத்தின் நாயகி எமி ஜாக்ஸன் ஒரு பாடலுக்கு வந்து போனதோடு சரி. அப்புறம் எந்த நிகழ்விலும் இல்லை. ஆடியோவை வெளியிட்ட போதுகூட அவரும் விக்ரமும் வரவில்லை (மேக்கப் கலைக்க விக்ரமுக்கு நேரமாகிவிட்டதாம்!)

    ஐ உருவாக்க வீடியோ

    ஐ உருவாக்க வீடியோ

    ஐ இசை வெளியீடு முடிந்த பிறகு கிட்டத்தட்ட 2 மணி நேரம் அரங்கில் உட்கார வைத்துவிட்டனர் (மாலை 6.45 -க்கு வந்தவர்!). அரங்கில் காட்டப்பட்ட ஐ பட உருவாக்கம் குறித்த காணொளியை சற்று ஆர்வமாகப் பார்த்தார் ரஜினி.

    பியானோ வாசித்த ரஹ்மான்

    பியானோ வாசித்த ரஹ்மான்

    என்னோடு நீ இருந்தால் என்ற பாடலை இரண்டாவது முறை ஒரு பாடகரை வைத்து பாடச் சொன்னார்கள். அவர் தமிழை உச்சரித்த விதம் மரண வேதனையைத் தந்தது. ஆனாலும் ரஹ்மான் பியானோ இசைத்ததற்காக பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள். இந்தப் படத்துக்காக இரண்டு ஆண்டுகளாக இசையமைத்துக் கொடுத்ததாகச் சொன்னார் ரஹ்மான்.

    கோட் சூட் விக்ரம்

    கோட் சூட் விக்ரம்

    பின்னர் ரஹ்மான் - ஷங்கர் கூட்டணியில் இடம்பெற்ற பாடல்களையெல்லாம் வைத்து ஒரு கலப்பிசைப் பாடலைப் பாடினார்கள். சீனக் கலைஞர் ஒருவர் சோப்புக் குமிழியில் ஒரு வித்தைக் காட்டிவிட்டுப் போனார். அதன்பிறகு மேக்கப் கலைத்து கோட் சூட் அணிந்து, எமி ஜாக்ஸனுடன் ஒய்யாரமாக வந்தார் விக்ரம்!

    English summary
    Here are few tidbits of Shankar's I movie audio launch that held on Monday night.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X