இளவரசி தொடரின் திடுக்கிடும் திருப்பம்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் இளவரசி தொடரின் கதையில் புதிய திருப்பங்கள் வரப்போவதாக தொடர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இளவரசி தொடர் சன் தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பல்வேறு சிக்கல்களை கடந்து 750 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது.
கணவன் மனைவியான நாயகன் சுப்பிரமணி, நாயகி இளவரசி வாழ்க்கையில் திருமணம் நடைபெற்றதில் இருந்தே பல சிக்கல்கள் உருவாகி வருகிறத. இப்போது குழந்தை பிறந்த பின்னரும் சிக்கல் நீடிக்கிறது. குழந்தையை யார் கடத்தியது என்பது தொடர்பாக கணவன் மனைவி இடையே பிரச்சினை உருவாகிறது. இப்போது இந்த தொடர் புதிய திருப்பங்களை சந்திக்க உள்ளதாம்.

தம்பதியரின் மோதல்
கணவன் சுப்ரமணிதான் குழந்தையை கடத்தியது என்று தவறாக நினைக்கும் இளவரசி கணவனை விட்டுப் பிரிந்து தோழியின் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். தோழியின் கணவன் கார்த்திக் திட்டம் போட்டு இளவரசியை சுப்ரமணியிடம் இருந்து அவளை நிரந்தரமாக பிரித்துவிடுகிறான்.

உண்மை தெரிகிறது
கார்திக்கின் நாடகம் இளவரசிக்கு தெரியவருகிறது. இதனை கார்த்திக் மனைவி அபியும் தெரிந்து கொள்கிறாள். இதனையடுத்து இளவரசியின் நன்மையை கருதி அபி எடுக்கும் முடிவு அவளுக்கே பாதகமாக அமைகிறது.

புதிய திருப்பம்
இதனிடையே நண்பனின் உதவியோடு ஆட்டோ ஓட்டும் சுப்ரமணிக்கு கோடீஸ்வர பெண் ரம்யாவின் நட்பு கிடைக்கிறது. அவள் இளவரசிக்கும் சுப்ரமணிக்கும் இடையே குறுக்கிடுகிறாளா? அவளது பயணம் எதை நோக்கியது என்று திடுக்கிடும் திருப்பங்களுடன் இனி வரப்போகும் எபிசோடுகளில் காணலாம். இதில் இளவரசியாக சந்தோஷியும், சுப்ரமணியாக ஸ்ரீகர் நடித்திருக்கின்றனர். இயக்கம் எம்.கே. அருந்தவராஜா, கிரியேட்டிவ் ஹெட் ராதிகா சரத்குமார்.


Click it and Unblock the Notifications